கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நடிகர் பார்த்திபன் ஐடியா வழங்கியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது,
புதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில் சின்ன சின்ன இடங்களில் அவசர மருத்துவமனைகள் தொடங்கினால் நன்றாக இருக்கும்.
சிறிய குழுக்களாக பிரிந்து அந்த அந்த தெரு முனையிலும், சாலை பகுதிகளிலும், சின்ன சின்ன இடங்களிலும் 24 மணி நேரம் மருத்துவமனை தயார் செய்தால் நன்றாக இருக்கும்.
இயன்றதை செய்வோம்! https://t.co/BQv5mVgAIK
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 24, 2020
பெரிய பெரிய பிளாட் வைத்து உள்ளவர்கள் மருத்துவத்திற்கு தற்காலிகமாக கொடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
என்னிடம் கூட பிளாட் உள்ளது. நானும் உதவி செய்ய தயாராக உள்ளேன். இப்படி செய்தால் தீவிரமாக பரவாமல் தடுக்கலாம்.
இது எவ்வளவு தூரம் செய்ய முடியும் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டடுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவரால் தான் இப்படி ஒரு ஐடியா கொடுக்க முடியும் என்று கூறி வருகின்றனர். பலரும் அதனை பாராட்டியும் வருகின்றனர்.



