இந்த மாதத்தில் பிறந்தவங்களுக்கு மட்டும் பண யோகம் அதிகம்.. நீங்களும் அதில் ஒருவர் தானா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் நிலை மட்டும் அல்லாமல், ஒருவர் பிறந்த மாதமும் வாழ்க்கையில் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தும். சில மாதங்களில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் மட்டுமல்ல, அதிர்ஷ்டத்தாலும் உச்ச நிலைக்குச் செல்வார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், கீழ்காணும் மாதங்களில் பிறந்தவர்கள் பணயோகம் பெற்றவர்கள் என்றும், முயற்சியை தவிராமல் தொடர்ந்தால் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
பிப்ரவரி – ஸ்டைல் + ஸ்ட்ரெங்க்த்
பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள், இயற்கையாகவே அழகு, ஆடம்பரம் மற்றும் தனித்துவத்தை விரும்புபவர்கள். அவர்கள் வாழ்க்கையில் மனவலிமை மற்றும் ஆழ்ந்த கனவுகள் முக்கிய பங்காற்றும். கடின உழைப்புடன் இணைந்த அவர்களது மிகுதி ஆசை தான், அதிக செல்வத்தை ஈர்க்கும்.
மே – மேன்மை மின்னும் மாதம்!
மே மாதத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கம் மற்றும் திட்டமிடல் குணம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் இலக்குகளை எளிதில் அடைய வல்லவர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவான நோக்கம் மற்றும் திறமையான திட்டம் இருப்பதால், கடின உழைப்பு மூலம் மிக பெரிய விஷயங்களை அடைவார்கள்.
நவம்பர் – புத்திசாலிகள் + பணக்காரர்கள்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலி, நவீன சிந்தனை கொண்டவர்கள். ஒரு வழி இல்லாத இடத்தில் கூட, வழி உருவாக்குபவர்கள். நிதி தொடர்பான விஷயங்களில் எப்போதும் ஆர்வமுள்ள இவர்கள், வேலை மற்றும் பிசினஸ் இரண்டிலும் வெற்றி காண அதிக வாய்ப்பு உள்ளது.
யாருக்கு யோகம்?
🔮 பிறந்த மாதத்தின் சக்தி உங்கள் பிறந்த நட்சத்திரம், ராசி, தசை நிலை போன்ற பல காரணிகளுடன் இணைந்து வேலை செய்யும். எனவே, தோன்றும் மாதம் மட்டுமல்ல, உங்கள் முழுமையான ஜாதகமே அதிர்ஷ்டத்தின் கதவை திறக்கும்!



