‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வந்த நிலையில் படக்குழு மீண்டும் சென்னை விரைந்துள்ளது.
இதில் காதலர் தினமான நேற்று சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அங்கு படத்தின் முக்கியமான தெறிக்கவிடும் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கபட்டதாக கூறப்படுகிறது. இதில் விஜய்யுடன் நடிகை கீர்த்தி சுரேஷூம் படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பின் போது, தன்னை பார்க்க குவிந்த ரசிகர்களை பார்த்து கையசைக்கும் விஜய்யின் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படம் வருகிற தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Vijay #Vijay62



