மகன் பிறந்தநாளில் நடிகர் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் Vijayakanth
தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனி இடம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் விஜயகாந்த். கருப்பு நிறம், கலையான முகம், தேசியப்பற்று, புள்ளி விவரத்தை கச்சிதமாக கூறும் நாயகன்.
சினிமாவில் படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ அப்படியே அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக வந்தார். ஆனால் இடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அப்படியே வீட்டில் முடங்கினார்.
மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து பேசும் விஜயகாந்த் இப்போதெல்லாம் மக்களை சந்திப்பது இல்லை, காரணம் அவரது உடல்நிலை. கடைசியாக சில மாதங்களுக்கு முன் வெளிவந்த விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.
அப்போது விஜயகாந்துடன் எடுத்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் கேப்டனா இது, இப்படி உடல் எடை குறைந்து காணப்படுகிறாரே என வருத்தப்பட்டு வருகிறார்கள்.





