விக்னேஷ் சிவன், இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் என்று ட்விட்டரில் நெகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார்.
கோலிவுட் கியூட் ஜோடிகளான நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பின்பு ஜாலியாக உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இந்நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது என்று டிவிட்டரில் நெகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இது பற்றி விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில், “நயன்தாராவும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். பிரார்த்தனை, ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் என எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிகப்பட்ட அழகான இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
உங்களின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்” என்று நேகிழ்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்கும் தங்கள் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.
Nayan & Me have become Amma & Appa❤️
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️😇
Need all ur blessings for our
Uyir😇❤️& Ulagam😇❤️ pic.twitter.com/G3NWvVTwo9— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022



