தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை த்ரிஷா. அன்றிலிருந்து இன்று வரை இவர் இளமையாகவே இருந்து வருகிறார்.
மணிரத்தினம் இயக்கத்தில், பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வம் பாகம் 1. தற்போது பொன்னியின் செல்வன் பாகம் 2ல் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.
ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் த்ரிஷாவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு த்ரிஷா அளித்துள்ள பதில், என் உயிர் அவர்களுடையது என்று ரசிகர்களை கை காண்பித்தார். இதனைக் கேட்ட ரசிகர்கள் பயங்கர மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.
மேலும் நடிகை த்ரிஷா 39 வயதாகியும் திருமணம் செய்யாததற்கு காரணம், திருமணத்திற்கு பின்பு தனது விருப்பப்படி படங்களில் நடிக்கமுடியாது என்பதற்காகவே திருமணம் செய்யாமல் இருப்பதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.