நடிகை த்ரிஷா 25 ஆண்டுகளுக்கு முன்பு விருது வாங்கிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா ஜோடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வரும் த்ரிஷா, தனக்கு படவாய்ப்பு குறையாத அளவிற்கு நடிப்புத்திறமையைக் காட்டி வருகின்றார்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தகையாக நடித்து அசத்தியது, த்ரிஷாவிற்கு வயதே ஆகாதா? என்று ரசிகர்களை கேள்வி எழுப்பும் படியாக இருந்தது.
இளையதளபதி விஜய்யுடன் லியோ, கோட் படத்தில் ஜோடியாக நடித்து அசத்தியதுடன், தற்போது விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார்.
நடிகை த்ரிஷா செப்டம்பர் 30 அன்று த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

செப்டம்பர் 30, 1999 அன்று மிஸ் சென்னை பட்டம் வென்றிருந்த நிலையில், அப்படத்தினை பகிர்ந்துள்ளார். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் த்ரிஷாவின் அழகு அப்படியே உள்ளது என்று பல ரசிகர்கள் கூறுகின்றனர்.



