நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கி வரும் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை முடித்தவுடன் அவர் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
சூர்யாவின் 38வது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’, படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்சேதுபதியுடன் ‘ஜூங்கா’, கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் சாயிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



