பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமாக 80 நாட்களை கடந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.ரகசிய அறையில் இருந்து இன்று சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.அவரை தொடர்ந்து கனடாவில் இருந்து லொஸ்லியாவின் குடும்பம் வருகை தந்திருந்தனர். லொஸ்லியாவின் தந்தையின் வருகையால் பிக் பாஸ் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் கவினுக்கு நிகழ்ந்த துயரம் கடந்த 78 நாட்களில் நடக்காத ஒன்றினை அனுபவித்து வந்துள்ளார்.வெளியில் தாய் மற்றும் குடும்பம் சிறையில் காணப்படுகின்றனர். உள்ளே லொஸ்லியாவுடனான காதலால் சற்று மகிழ்ச்சியாய் காணப்பட்டார் கவின்.நேற்று மீண்டும் காதல் தோல்வியால் அழுதார்.

கவின் இவ்வாறு அழுததைத் தொடர்ந்து, இணையத்தில் #Staystrongkavin என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகியுள்ளது. இந்த டிரெண்டுக்கு கவின் ரசிகர்கள் தான் காரணம். பலர் கவினுக்கு ஆதரவாக ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒருபுறம் உலகளவில் ட்ரெண்டாகி வந்தாலும் மறுபுறம் இந்த காதல் தோல்வியினாலும், நம்மால் லொஸ்லியாவிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டதை நினைத்து வருந்திய கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி வருகின்றன. அதாவது நம்ம ஓவியா போல இருக்கும் என்று பலர் கூறிவருகின்றனர். சிலரோ கவினுக்கு வீட்டு பிரச்சினையும் தெரியவந்திருக்கும் என்று கூறிவருகின்றனர். எது எப்படியோ! இன்றுடன் 80வது நாளைக் கடந்து வரும் கவினுக்கு இன்னும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here