திரையுலகில் மிகச்சிறிய வயதில் கால்பதித்து மாபெரும் சாதனையாளர்களாக உருவெடுத்தவர்களில் ஸ்ரீதேவியும் ஒருவர். இவர் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார்.
இவரின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இவரைபோல தேற்றத்திலும், இறப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றும் ஒரு நடிகையின் பக்கமும் இணையத்தளவாசிகளின் கவனம் திரும்பியுள்ளது.
பார்பதற்கு அச்ச அசல் ஸ்ரீதேவி போலவே தான் இருப்பார் திவ்ய பாரதியும். முக தோற்றம் மட்டுமல்ல, நடிப்பும், பாவனைகளும் கூடவே ஸ்ரீதேவி போலவே தான் காணப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஸ்ரீதேவியின் தங்கை என்றும், ஜூனியர் ஸ்ரீதேவி என்றும் தான் அழைக்கப்பட்டார் திவ்ய பாரதி. தனது இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார் இவர்.
மூன்றே வருடத்தில் முன்னணி நாயகிகளுக்கு இணையாக வளர்ந்தார். பெரும் பட்ஜெட் படங்களில், பெரிய நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், எதிர்பாராத நேரத்தில், இவரது பால்கனியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்தியாவில் மர்மமான முறையில் இறந்த பிரபலங்களின் பட்டியலில் திவ்ய பாரதியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு, இவரது மரணம் பற்றிய செய்திகளும் ஆங்காங்க தூசித்தட்டப் படுகின்றன.
இவர்கள் இருவரின் மரணத்தின் நடுவே சில தகவல்கள், விஷயங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.
90களில் காண்பதற்கு நிஜமாகவே அக்கா, தங்கை போல தான் இருந்தனர் ஸ்ரீதேவியும், திவ்ய பாரதியும். திடீரென்று யாராவது இவர்கள் இருவரையும் கண்டால் கொஞ்சம் ஆச்சரியத்தில் பூரித்து போய்விடுவார்கள்.
முகத்தில் மட்டுமின்றி, மரணத்திலும் கூட திடீரென உயிரிழந்து ரசிகர்களை, திரை துறையினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது இவர்களது இழப்பு.
90-களில் இவர்கள் இடையே வெளிப்படையாக பெரிய போட்டி நிலவவில்லை என்றாலும் கூட, வாய்ப்புகள் கைமாறி போயின. இவரின் தேதிகளில் யாருடையது கிடைக்கிறதோ அவரை வைத்து படங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர். காரணம் இவருவரும் ஒரே மாதிரி இருந்தது என்று கூறப்படுகிறது.
இதனால், பிஸியாக இருந்த காரணத்தால் ஸ்ரீதேவிக்கு வந்த வாய்ப்புகள் திவ்ய பாரதிக்கும், திவ்ய பாரதிக்கு போக வேண்டிய வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கும் மாறி, மாறி சென்றுள்ளன.
நடிகை ஸ்ரீதேவி இறந்த தினம் பிப்ரவரி 24 இரவு 11.30 மணி. திவ்ய பாரதியின் பிறந்த நாள் பிப்ரவரி 25. ஒருவருடைய இறப்பு நாளும், மற்றொருவருடைய பிறப்பு நாளும் அடுத்தடுத்து அமைந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சரியாக, திவ்ய பாரதி இறந்து 25 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி மரணம் அடைந்துள்ளார்.
ஏப்ரல் 5,1993ம் நாள் எதிர்பாராத விதமாக நடிகை திவ்ய பாரதி குடி போதையில் தனது பால்கனியில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என்ற செய்தி வெளியானது.
ஆரம்பத்தில் கார்டியாக் அரஸ்ட் என்று கூறப்பட்டாலும், மும்பை போலீஸ் வெளியிட்ட இறப்பு அறிக்கையில் நடிகை ஸ்ரீதேவி இறந்த போது அவரது இரத்தத்தில் ஆல்கஹால் கலப்பு இருந்தது அறிய வந்தது.
இருவரின் இறப்புக்கும் போதை ஓர் காரணமாகவும், ஒற்றுமையாகவும் அமைந்துள்ளது. இதுவும் ஒரு மர்மமான சூழலை ஏற்படுத்துகிறது.
ஸ்ரீதேவி போலவே ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் மிக பிஸியான நடிகையாக இருந்தார் திவ்ய பாரதி. திவ்ய பாரதி வளர்ந்து வந்த நேரத்தில் ஸ்ரீதேவி இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும், இந்தியாவிலேயே அதிக ஊதியம் வாங்கி வந்த நடிகையாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருமொழி
படங்களிலும் கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கு ஒரு மாற்று நடிகையாக மட்டுமின்றி, போட்டி நடிகையாகவும் வளர துவங்கினார் திவ்ய பாரதி.
திவ்ய பாரதி ஏப்ரல் 5,1993 அன்று இரவு 11 மணிக்கு மேல் மும்பையில் இருந்த தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து இறந்தார் என்று அறியப்பட்டது.
அருகே இருந்த கூப்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.
அவரது தலையில் பலத்த காயமும், அதிக இரதப்போக்கும் ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. நடிகை ஸ்ரீதேவியின் மரணமும் இரவு 11.30 மணிக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
திவ்ய பாரதியின் கணவருக்கு நிழலுக தாதாக்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் யாரேனும் கொலை செய்திருக்கலாம், அவரே தற்கொலை செய்துக் கொண்டாரா, அல்ல அவர் மது போதையில் இருக்கும் போது அவரை பின்னாடி இருந்து யாரேனும் தள்ளிவிட்டனரா? என்று போலீஸ் பல கோணங்களில் விசாரித்தது.
ஆனால், போதிய ஆதாரம் அல்லது காரணங்கள் இல்லாத காரணத்தால் இவரது வழக்கை மும்பை பொலீஸ் 1998ல் மூடியது.
தற்போது ஸ்ரீதேவியின் மரணவிசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. மர்மம் விலகுமா இல்லை பொலீசாரினால் விசாரணைகள் மூடி மறைக்கப்படுமா..? பொருத்திருந்து பார்ப்போம் ஸ்ரீதேவியின் மரணத்தில் என்ன நடக்கின்றது என்பதை..




