மாஸ் காம்பினேஷனில் சிவகார்த்திகேயன் – மோகன்லால்
தமிழ் சினிமாவில் தென்றலாய் திகழும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது பராசக்தி மற்றும் மதராஸி எனும் படங்களில் பிஸியாக உள்ளார். இதற்கிடையில், அவர் நடிக்கவுள்ள 24வது திரைப்படம் குறித்து ஹாட்டான அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்கம் விநாயக் சந்திரசேகர்
இந்த புதிய படத்தை, குட் நைட் படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறதாம். குடும்ப பாசம் மற்றும் தந்தை-மகன் உறவை மையமாக கொண்ட கதை இதுவாக இருக்கப் போவதுடன், இது ஒரு உணர்வுப்பூர்வமான படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.
தந்தையாக மோகன்லால்?
சினிமா ரசிகர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும் செய்தி என்னவென்றால், இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த செய்தியை ஒரு மூத்த பத்திரிகையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜில்லாவை நினைவூட்டும் சூழ்நிலை
மோகன்லால் தமிழில் முன்னதாக விஜய்யின் தந்தையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது சிவகார்த்திகேயனுடன் அவர் இணைகிறார் என்றால், இது கண்டிப்பாக செம மாஸ் கூட்டணி என்றே சொல்லலாம்.இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட வேண்டும் என்றாலும், ரசிகர்கள் இடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.



