எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!

எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!
எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!

இளநீர் நன்மைகளும் பகக் விளைவுகளும்: சித்திரை மாதம் தொடங்கும் முன்னதாகவே, வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. கடும் கோடையில், நம்மை காக்கும் அற்புத பானங்களில் ஒன்று இளநீர். தினமும் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இளநீரினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்பதோடு, குடல் ஆரோக்கியத்திற்கும் பல அற்புத நன்மைகளை தருகிறது. மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம். அதோடு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக தொற்று பிரச்சனை உள்ளவர்களுக்கு, இளநீர் ஒரு அருமருந்து. ஆனால், நமது முன்னோர்கள் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறியுள்ளனர். அளவிற்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் அதனால், ஆரோக்கியத்திற்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படக்கூடும்.

இளநீரின் பக்க விளைவுகள்

அளவிற்கு அதிகமாக இளநீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளலாம். அதோடு, பெரும்பாலானவர்களுக்கு இளநீர் குடிப்பது, எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது எனினும் ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் எந்த அளவிற்கு இளநீர் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. அளவிற்கு அதிகமாக இளநீரை குடிப்பதால், உடலில் பொட்டாசியம் அளவு அதிகரித்து, ஹைப்பர் கேமியா (Hyperkalemia) பிரச்சனைக்கு வழி வகுக்கலாம்.

கால்சியம் பற்றாக்குறை

இளநீரை அளவிற்க்கு அதிகமாக அருந்துவதால், கால்சியம் போன்ற சில அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள், சிறுநீர் மூலமாக உடலில் இருந்து வெளியேறலாம். இதனால் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் மூட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

குறைந்த ரத்த அழுத்தம்

அளவிற்கு அதிகமான இளநீரை குடிக்கும் போது, உடலில் பொட்டாசியம் சத்து, தேவையான அளவை விட மிகவும் அதிகரிக்கும்போது, குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உண்டாகும். அதிகப்படியான பொட்டாசியம், ஹைப்பர் கேமியாவை ஏற்படுத்துகிறது. இதனால் இதய பிரச்சினைகள், தசைகள் பலவீனமடைந்தல் போன்றவையும் உண்டாகலாம். மேலும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இளநீர் நல்லது என்றாலும், அளவோடு குடிப்பது நல்லது.

குடல் சார்ந்த பிரச்சினைகள்

அதிக இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அளவிற்கு அதிகமாகும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் உடலில் வீக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலர்ஜி காரணமாக, சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்படலாம். இதனால் எதிர் விளைவுகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

நாளொன்றுக்கு இளநீர் எந்த அளவிற்கு குடிக்கலாம்

இளநீர் எவ்வளவு குடிக்கலாம் என்பது குறித்து, நிபுணர்கள் கூறுகையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு இளநீர் குடிக்கலாம் என்கின்றனர். தினமும் குடிப்பவர்கள், இந்த அளவிற்கு மிகாமல் குடிப்பது நல்லது. மேலும், பேக் செய்யப்பட்ட இளநீர் அவ்வளவு நல்லதல்ல. இதில் சேர்க்கை சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதால், உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே பாக்ஸ் செய்யப்பட்ட இளநீரை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் இளநீரை அப்படியே உட்கொள்வது தான் நல்லது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles