சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹன்சிகாவை போலவே தமன்னாவும் அண்ணாச்சியுடன் இணைந்து விளம்பரத்தில் நடித்துள்ளார்.
எனவே, தமன்னாவை எப்படியாவது அண்ணாச்சியுடன் ஜோடி சேர சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்று படக்குழுவினர் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.
அதே போல தமன்னாவும் இதுகுறித்து இதுவரை மறுப்பு தெரிவித்து எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

எனவே, தமன்னா இந்த படத்தில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது அண்ணாச்சி நடிக்க போகும் படத்திற்காக படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தப்படும் ஷூட்டிங் ஸ்பாட் களை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



