பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர் தான் தர்ஷன். இலங்கையில் இருந்து வந்துள்ள இவர் பிரபல மாடலும் கூட. இவர் பிக்பாஸ் வீட்டில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பாதலே அனைவருக்கும் இவரை பிடித்துப்போய் உள்ளது.
இந்த சீசனின் டைட்டிலை வெல்ல இவர் தான் சரியானவர் என்று சக போட்டியாளர்கள் அனைவருமே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
தர்ஷனும் தன் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் எந்தவித பிரச்சினைகளிலும் சிக்கவில்லை. நல்லபிள்ளையாகவே எல்லோருக்கும் பிடித்தபடி விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தர்ஷன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் ஒன்றிற்கு சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனம் பகிர்ந்துள்ளார்.
அதில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பிக்பாஸ் டைட்டிலை வெல்ல அனைத்து தகுதிகளும் உங்களுக்கு உள்ளது என கூறியுள்ளார்.
எப்படியும் நேற்றிரவு பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டி, தர்ஷனின் பிறந்தநாளைக் கொண்டாடி இருப்பார்கள். அது தொடர்பான காட்சிகளை இன்றைய எபிசோட்டில் காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.



