குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் ரோகிணி 04.10.2018 முதல் 04.11.2019 வரை
மன அமைதியை விரும்பும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் குடும்ப நிம்மதியும், லாபமும் அமையப் பெறப் போகிறிர்கள். குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது இருக்கும். அதைப் பயன்படுத்தி உங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். தொழிலைப் பொறுத்தவரை இதுவரை இருந்து வந்த மந்த நிலையில் இனி ஓரளவிற்கு முன்னேற்றத்தை காணலாம். ஆர்டர் தராமல்திருப்பி அனுப்பிய அனைவரும் உங்களைக் கூப்பிட்டு புதிய ஆர்டர்களைக் கொடுப்பார்கள்.
உத்தியோகத்தைப் பொறுத்தவரையில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும் அவர்கள் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அனைவராலும் கேளிக்கைக்கு ஆளாகிய நீங்கள் குருவின் அனுகிரகத்தால் ஓரளவிற்கு மதிப்பு, மரியாதையுடன் நடத்தப்பெறுவீர்கள். பெண்களில் சிலருக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். திருமண வாழ்வில் விவாகரத்து வரை சென்றவர்கள் கூட குருவின் கடாட்சத்தால் பிரச்னைகள் தீர்ந்து சேர வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை மாறி ஓரளவிற்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு கட்சிப் பணியில் தொய்வு வரலாம். அதிரடி முடிவுகள் கட்சியில் எடுக்கப்படும். கலைத்துறையினருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். அழகு கூடி காட்சியளிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து உங்களை மெருகேற்றும்.


