கேது பகவான் ராசிக்கு 3ம் இடமான தைரிய மற்றும் இளைய சகோதரர் ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் எந்த செயலிலும் உங்களின் செயல் திறன் சிறக்கும். தைரியத்துடன் இறங்குவீர்கள். இளைய சகோதர்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். அவர்களுக்கும் மிக சிறப்பான பலன்கள் உங்கள் மூலம் கிடைக்கக்கூடும்.
எதிர்பாரத்த சுப காரியங்கள் நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிரிகள் நீங்குவதோடும், உத்தியோகத்தில் நற்பெயர் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கக் கூடும். நண்பர்கள், உறவுகள் நெருங்கி வருவர்.
பரிகாரம்
புதன் கிழமைகளில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது நன்மை


