குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் பூசம் 04.10.2018 முதல் 04.11.2019 வரை
தாய் தந்தையரை போற்றும் பூச நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சி பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவரவர்கள் விருப்பம் நிறை வேறும். குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும்.
தொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள். உங்களின் தொழிலில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். உத்யோகஸ்தர்கள் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இதுவரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
பெண்களுக்கு பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை வேண்டாம்.
மாணவர்களுக்கு பணத்தால் தடைபட்ட கல்வியும் சிலருக்கு தொடர வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் மாறும். அரசியல்துறையினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகமும் உண்டாகும். உங்களைப்பற்றி குறை கூறியவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். கலைத்துறையினருக்கு கதை இலக்கியத்தைப் பொறுத்த வரை சிலர் விருதுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. சிலர் அரசின் விருதுகளாலும் கௌரவிக்கப் படுவீர்கள்.
ஏனைய நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களை இங்கே சென்று பார்வையிடுங்கள்


