பொங்கலுக்கு பின் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வமும் புகழும் உயரும்!
Pongal 2026 Horoscope Tamil: தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய பகவான் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு மாறுகிறார். உத்தராயணம் தேவர்களின் பகல் காலமாகவும், தட்சிணாயணம் தேவர்களின் இரவு காலமாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 14, 2026 அன்று பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த சூரிய மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள், செல்வ வளர்ச்சி, சமூக அந்தஸ்து உயர்வு மற்றும் புகழ் போன்ற பலன்களை கொண்டு வரப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்களுக்கு பொங்கலுக்கு பிந்தைய காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வு தொடர்பான வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலை மெல்ல மெல்ல வலுவடையும்.
திருமண வாழ்க்கையில் அமைதியும் புரிதலும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். சரியான முயற்சியுடன், மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை வெற்றிகரமாக அடைவார்கள்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு பொங்கலுக்கு பின் வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வருமான வழிகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி ஏற்படும்.
இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். புதிய வேலை வாய்ப்புகள் அல்லது தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் கிடைக்கலாம். சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு பொன்னான காலமாக அமையும்.
கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்களுக்கு பொங்கலுக்கு பின் வாழ்க்கையில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். வங்கிக் கணக்கில் பண வரவு உயரும். சூரிய பகவானின் அருளால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.
புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சரியான நேரமாக அமையும். தொழில் வாழ்க்கையில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
சிம்மம் (Leo)
சூரியன் சிம்ம ராசியின் அதிபதி என்பதால், இந்த பொங்கல் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும். பணியில் இருப்பவர்களுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படும். உங்கள் சாதனைகள் அனைவராலும் பாராட்டப்படும்.
முதலீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை தரக்கூடும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் புகழும் உயரும். உறவுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, மனநிறைவு கிடைக்கும்.
மீனம் (Pisces)
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் மிகச் சிறப்பான பலன்களை அளிக்கும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். வீடு மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சமூக அந்தஸ்து உயர்ந்து, உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீண்டகால முதலீடுகளுக்கு இது மிகவும் நல்ல காலமாகும்.
Disclaimer: இந்த ராசிபலன் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். இது தகவல் நோக்கத்திற்காக மட்டுமே.



