Saturday, October 10, 2020
Home ஆன்மீகம் பிள்ளைகளுக்கு இறைவனின் பெயரை சூட்டுவது ஏன்?

பிள்ளைகளுக்கு இறைவனின் பெயரை சூட்டுவது ஏன்?

குழந்தைகளுக்கு ஏன் இறைவனின் பெயர்களை வைத்தனர். இறைவனின் பெயர்களை உச்சரிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும். குழந்தைகளுக்கு இறைவனின் பெயர் வைத்து திரும்பத் திரும்ப அழைப்பதால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்…

ஒரு மன்னன் பெருமாள் மீது மிகுந்த பக்தியும், மக்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டிருந்தான். ஒரு நாளும் அவனால் திருமாலின் திருநாமங்களை உச்சரிக்காமல், தரிசிக்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது என்ற அளவில் பக்தியுடன் இருந்தான்.

இருப்பினும் அந்த மன்னனுக்கு முன் வினை அவனைத் தொடர்ந்ததால் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டான்
அதனால் அவனால் நாட்டை கவனிக்க முடியாமல் போனது. உடனே அவனின் மூத்த மகனுக்கு முடிசூட்டி நாட்டை ஒப்படைத்தான். அவனோ படுக்கை படையாகி விட்டான்.

- Advertisement -

இருப்பினும் திருமால் கொண்டிருந்த பக்தியும், அன்பு மட்டும் குறையவே இல்லை. சதா சர்வ காலம் அச்சுதா… அச்சுதா… என சொல்லிக் கொண்டே இருந்தான்.

- Advertisement -

மறுபுறம் இறைவா உன்னையே நித்தமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் விரைவாக என் உயிரைப் பறித்து உன்னுடன் சேர்த்துக் கொள் என வேண்டிக் கொண்டிருந்தான்.

அப்படி இருக்க ஒருநாள் அவனது அரண்மனைக்கு ஒரு முனிவர் வந்தார். அவரிடம் “சுவாமி நான் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனாலும் என் உயிர் மட்டும் என்னை விட்டு பிரிய மறுக்கிறதே. நான் என் செய்வேன்” என அழுது புலம்பினான்.

அரசனைத் தேற்றும் விதமாக அந்த முனிவர், “மன்னா நீ அன்ன தானம் செய்து வருகிறாயா?” என கேட்டார்.
அதற்கு மன்னன் ஆமாம் சுவாமி என் அரசின் கீழ் தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு வழங்கப்படுகிறது என்றார்.

முனியோ, “சரி, இனிமேல் அவர்களுக்கு வயிறார உணவு படைப்பதற்குப் பதிலாக, அரைகுறையாக உணவு வழங்கு. அவர்கள் அரைகுறையாக வயிறு நிரம்பியதால் சாபம் இடுவர். அதனால் நீ இறந்து போவாய்” என்றார்.

முனிவர் சொன்னதில் தனக்கு உடன் பாடு இல்லாவிட்டாலும், அனைத்தையும் அறிந்த முனிவரே சொல்கிறாரே என ஏற்றுக் கொண்டு, இனி அரை சாப்பாடு போடும்படி உத்தரவு பிறப்பித்தான்.
அவர்களும் சாப்பிட்டு மன்னனை சபித்தனர். இருப்பினும் மன்னனின் உயிர் பிரிவதாக இல்லை.

நோயின் கொடுமையை அனுபவித்து வந்த மன்னன், முனிவரிடம், “இன்னும் என் உயிர் பிரிய மறுக்கிறதே, ஏன்?” என கேட்டார்.

அதற்கு முனிவர் நானும் வரும் வழியில் கவனித்தேன், அங்கு அன்னதானம் செய்பவர்கள் வெறுமனே அவர்களுக்கு உணவு பரிமாறுவது இல்லை. ஒவ்வொரு முறை அன்னமிடும் போதும் அச்சுதா, அச்சுதா என பெருமாளின் பெயரை சொல்லிக் கொண்டே உணவிடுகின்றனர்.

பெருமாளின் பெயர் சொன்னால் உயிர் பிரியாது. அதனால் அன்னதானம் வழங்குபவர்களிடம் இனி அச்சுதா என சொல்லாமல் உணவளிக்க உத்தரவிடுங்கள் என கூறினார்.

இதை கேட்டு மன்னன் அதிர்ச்சியடைந்தான். எனக்கு இருக்கும் நோய் மட்டுமல்லாமல் மேலும் பல நோய் வந்து சேர்ந்தாலும், எத்தனை அவஸ்தை நான் கூடுதலாக அனுபவிக்க வேண்டுமானாலும் பரவாயில்லை. அந்த நோய்கள் நீடித்துவிட்டுப் போகட்டும். ஆனால் என்னால் பெருமாளின் திருநாமத்தை உச்சரிக்காமல் இருக்க முடியாது. மற்றவர்கள் உச்சரிப்பதையும் தடுக்க முடியாது என கூறினார்.

அதோடு நீண்ட நாளாக பழக்கப்பட்டதை அவ்வளவு எளிதாக விட்டு விட முடியாது என்றார்.

மன்னனின் பக்தியையும், மன உறுதியையும் கண்டு மகிழ்ந்து போன எம் பெருமான், அந்த மன்னனின் முன் தோன்றி, உன் பக்தியையும், ஆட்சியையும் மெட்சினேன். உனக்கு வைகுண்டத்தில் என்னுடன் வாழும் பாக்கியத்தையும், முக்தி எனும் பிறவா வரத்தை வழங்கினார்.

பிள்ளைகளுக்கு இறைவனின் பெயர்
இறைவனின் பெயருக்கு இத்தனை சக்தியும், சிறப்புகளும் உண்டு என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு தங்களின் இஷ்ட தெய்வத்தின் பெயரை சூட்டுவது வழக்கமாக வைத்திருந்தனர். தன் பிள்ளைகளை அழைக்க மட்டுமில்லாமல், அனுதினமும் இறைவனின் பெயரை துதிக்கும் வகையில், தான் உணராமலே, இறைவனின் பெயரை அழைக்கும் விதமாக தான் குழந்தைகளுக்கு பெயர் வைத்தனர்.

இறைவனின் பெயரால் குழந்தைகளைத் திரும்பத் திரும்ப அழைக்கும் போது அவனின் அன்பும், அருளுக்கும் நாம் பாத்திரம் ஆவோம்.

கோவிந்தா, கோபாலா, கேசவா, மாதவா
ராமா, ஸ்ரீ கிருஷ்ணா, வேங்கடேசா உன் திருவடிகளே சரணம்…

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

இன்றைய ராசி பலன் – 10-10-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான செய்திகள் வரலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயத்திIல் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம்…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கும் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் சமீபத்தில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் விவாதமொன்றில் கலந்துகொண்டிருந்தார்.இந்நிலையில் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.தனக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் இருமுறை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப்…

பிரான்சை புரட்டி எடுக்கும் அலெக்ஸ் புயல்: பலரை காணவில்லை

பிரான்ஸ் நாட்டை அலெக்ஸ் என்று பெயரிடப்பட்ட புயல் புரட்டி எடுத்து வருகிறது. நைஸ் நகரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குறைந்தது எட்டு பேரைக் காணவில்லை.சில இடங்களில் 24 மணி நேரத்தில் 450 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது நான்கு மாதங்களில் பெய்யும் மழை அளவுக்கு சமமாகும்.இதேபோல், 2015ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ஆம் திகதி பிரான்சில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கேன்ஸ் நகரிலும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் 20 பேர் உயிரிழந்தார்கள்.ஆனால்,…

செம கலாய்! பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம்! கலாய்த்த...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொது மக்கள் தினம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இந்த தீர்மானத்தின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதுடன் இந்த கால எல்லைப்பகுதிக்குள் கல்வி அமைச்சிடம்…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software