Numerology 2025: 2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். எண் கணிதத்தின் படி, 2025 ஆம் ஆண்டு சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்க போகிறது. எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்கள் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டு தொகையின் ஒற்றை இலக்க எண்களாகும். உதாரணமாக, ஒருவரது பிறந்த தேதி 24 என்றால் அந்நபருக்குரிய எண் 2+4 =6 ஆகும்.
ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டின் கூட்டுத்தொகை 9. இந்த 9 ஆம் எண்ணின் அதிபதி செவ்வாய். எனவே இந்த 2025 ஆம் ஆண்டில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். செவ்வாயின் ஆதிக்கத்தால், 2025 ஆம் ஆண்டில் சில தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது எண் கணிதத்தின் படி, 2025 ஆம் ஆண்டில் எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

எண் 4
ஒரு மாதத்தின் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மங்களகரமான ஆண்டாக இருக்கும். பொதுவாக எண் 4-ன் அதிபதி ராகு. இந்த ராகுவால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் சில நேரங்களில் சிக்கல்களால் அவதிப்படுவார்கள். ஆனால் 2025 ஆம் ஆண்டு இந்த எண்ணிற்கு உரியவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். கனவு நனவாகும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
எண் 6
ஒரு மாதத்தின் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கும். எண் 6-ன் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் ஈர்க்கும் சக்தியைக் கொண்டது. எனவே இந்த ஆண்டு இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரிய சாதனையை புரிவார்கள். வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகளில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், இறுதியில் அனைத்தும் சரியாகிவிடும்.
எண் 8
ஒரு மாதத்தின் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முன்னேற்றத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். எண் 8-ன் அதிபதி சனி. எனவே சனியின் தாக்கத்தால் இதுவரை முழுமையடையாத வேலை இந்த ஆண்டில் வெற்றிகரமாக முடிவடையும். இருப்பினும் அதற்கு கொஞ்சம் கடின உழைப்பு தேவைப்படும். பொறுமையுடன் இருந்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அற்புதமானதாக இருக்கும். எண் 9-ன் அதிபதி செவ்வாய். இவர் தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாவார். இதனால் இதுவரை முழுமையடையாமல் நிலுவையில் இருந்த வேலைகள் இந்த ஆண்டில் வெற்றிகரமாக முடிவடையும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.