NERKONDA PAARVAI (TAMIL) MOVIE REVIEW Watch #NerkondaPaarvai NERKONDA PAARVAI HD online
போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தைராங் ஆகிய மூவரும் கான்சர்ட் ஒன்றில் கலந்து கொள்கிறார்கள். அங்கே அர்ஜூன் சிதம்பரம், அஸ்வின் ராவ், ஆதிக் ரவிச்சந்திரன், மூவரையும் சந்திக்கின்றனர்.
பெண்கள் யதார்த்தமாக பழக, அந்த ஆண்கள் அதனை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு 3 பெண்களையும் தவறாக அணுகுகின்றனர். அவர்களை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் 3 பெண்களையும், பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக ஷரத்தாவை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல் செய்த பலம் பொருந்திய அர்ஜூன் சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக ஷரத்தா தனது தோழிகளுடன் வழக்கு பதிவு செய்கிறார். ஆனால், அது அவர்களுக்கே வினையாக மாற, 3 பெண்கள் மீது தவறான பிம்பம் சித்தரிக்கப்படுகிறது.
இதனால் ஆதரவற்று செய்தவறியாமல் திகைக்கும் பெண்களுக்கு ஆதரவாக ஆபத்பாந்தவனாக களமிறங்குகிறார் பரத் சுப்ரமணியம் எனும் வழக்கறிஞரான அஜித் குமார். அஜித் குமாரின் நேர்த்தியான வாதத்தால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கும் நீதி கிடைத்ததா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை.
வழக்கறிஞராக சீரான மன நிலையில்லாத வேடம் அஜித்துக்கு. மூன்று பெண்களின் பிரச்சனைகளை கேட்டு உருகுவது, அநீதிகளுக்கு எதிராக வெடிப்பது என அஜித்குமாரின் நடிப்பில் நல்ல முயற்சி. அவரது பாடி லாங்குவேஜ் மற்றும் கம்பீரமான குரல் என ஒரு வழக்கறிஞரை கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக “அப்படி எல்லாம் நடக்காது. நடக்கவும் கூடாது” என்று அவர் சொல்லும் காட்சி மாஸ். ஒரு வழக்கறிஞராக மட்டுமில்லாமல் அன்பான கணவராகவும், அட்டகாசம் செய்யும் ஆசாமிகளை, படத்தின் ஒரே ஒரு சண்டைக் காட்சியில் அடித்து துவைப்பதும் என மிரட்டியிருக்கிறார்.
அஜித்திற்குரிய காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் படத்தின் டிராக்கில் இருந்து பெரிதும் மாறாமல் கச்சிதமாக இடம்பெற்றுள்ளது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளியே சொல்லமுடியாமல் கூச்சம் ஒரு பக்கம், அதனால் ஏற்படும் கோபம் மறுபக்கம் என இரட்டை மனநிலையை சரியாக கையாண்டிருக்கிறார் ஷரத்தா ஸ்ரீநாத்.
எதிர்தரப்பு வக்கீலாக தனது அழுத்தமான குரலை பதிவு செய்யும் ரங்கராஜ் பாண்டேவிற்கு இந்த படம் நல்ல அறிமுகம் என்று சொல்லலாம். மேலும் வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி , ஆண்ட்ரியா என அனைவரும் தங்களின் வேடத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் யுவன் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். குறிப்பாக யுவனின் இசையால் காட்சிகள் மேலும் உயிர் பெறுகின்றன. நீதிமன்ற பின்னணியில் நடக்கும் பெரும்பாலான காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குவிந்துக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கு எதிராக தனது வலுவான குரலை பதிவு செய்திருக்கிறது. பெண்களுக்கு நிகழும் பிரச்சனைகளுக்கு பெண்களையே குற்றவாளிகளாக்கும் சமூகத்துக்கு சாட்டையடி கொடுக்கிறது இந்த படம்.
மேலும் தங்களுக்கு நிகழும் அநீதிகளை பெண்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும் என்ற ஆழமான கருத்தை அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் கவனம் ஈர்க்கிறது இந்த நேர்கொண்ட பார்வை.
Verdict: அஜித் தனது மாஸ் இமேஜை ஒதுக்கி வைத்துவிட்டு, வலுவான சோசியல் மெசேஜ் சொல்லும் படத்தை தரமாக கொடுத்திருக்கிறார்.
ONLINE RATING 3.25 ( 3.25 / 5.0 )
PUBLIC REVIEW BOARD RATING ( 4.25 / 5.0 )
NERKONDA PAARVAI (TAMIL) BEHINDWOODS VIDEO REVIEW
Tamiltakies Blue sattai NERKONDA PAARVAI review
https://www.youtube.com/watch?v=fwN_XaK3Oag
Public NERKONDA PAARVAI review
Prashanth NERKONDA PAARVAI review
Nerkonda Paarvai Public Review , Nerkonda Paarvai Review , Valaipechu Nerkonda Paarvai Review , shruti tv Nerkonda Paarvai , Ajith Kumar , Shraddha Srinath , Abhirami Venkatachalam , Rangaraj Pandey , Nerkonda Paarvai , Nerkonda Paarvai trailer , ner konda paarvai songs , ner konda paarvai teaser , nerkonda paarvai tamil movie , ner konda paarvai in tamil trailer , ner konda paarvai movie trailer , ajith kumar new movie , shraddha srinath tamil movies , Nerkonda parvai public review