நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்று பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் , ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.திருமணத்தில் சிவப்பு நிற உடை அணிந்துள்ள நயன்தாரா வர்ணிக்க முடியாத அழகில் ஜொலிக்கிறார்.
சிவப்பு நிற சேலையில் தேவதையாக வந்த நயன்தாரா! அணிந்திருந்த நகை பற்றி தெரியுமா? வெளியான புகைப்படங்கள்.
நயன்தாரா அணிந்திருந்த நகை
சிவப்பு நிற உடைக்கு காண்ட்ராஸ்டான பச்சை நிற விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகளை தேர்வு செய்துள்ளார். இந்த அணிகலன்கள் ரிச் லுக்கை தருகிறது.
அணிந்திருக்கும் உடைக்கும் கூடுதல் அழகும் சேர்க்கும் வகையில் சரியான மேக்கப்பை தேர்வு செய்துள்ளார். சிவப்பு நிற பொட்டு மேலும் அழகை சேர்த்துள்ளது.
நயன்தாராவின் உடையுடன் ஒற்று போக சாண்டல் நிற ஷர்வானியை தேர்வு செய்துள்ளார் விக்னேஷ் சிவன். இருவரும் வெள்ளை நிற மாலை அணிந்து பார்க்க அழகாக உள்ளனர். புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.