வாழ்க்கை வாழ்வதற்கே, உலக சுகங்களே சுகங்கள் மற்றையவை எல்லாம் போலித்தனமானவை, என்று கூறும் ‘U’ ன் உள் சூரியக்கதிர்கள் முழுமையாக குவிக்கப்பட்டு உள்ளேயே இருப்பதால் நன்மையும், சில நன்மை குறைவுகளையும் ஏற்படுத் தும். அதிக உஷ்ணத்தை தருவதால் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. அடிக்கடி நீர் சம்பந்தமான நோய் களை தரலாம் (ஜலதோசம் குளிர்ச்சியாலும், உஷ்ணத்தாலும் வரும்).
நடை, உடை, பாவணைகள் சற்று வித்தியாசப்படுத்திக் காட்டும் இவர்களை. அடிக்கடி அயல் தேசங்களுக்கு பயணிக்க வாய்ப்பு தரும். அறுசுவை உணவை விரும்பி உண்ணும் இவர்கள் – கனிவான பேச்சும் – கவர்ச்சியும் கொண்டவர்கள். அழகை ஆராதிக்கும் இவர்கள் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உடையவர்கள். பிறரிடம் பேசிக்கொண்டே இருப்பர். இதனால் பலர் இவர்களின் விசிறிகளாகி விடுவர். கஷ்டமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். உடல் உழைப்பு என்பது மிகக் குறைவுதான். உலகில் வருங்காலத்தில் நடப்பவைகளை உள்ளுணர்வு மூலம் முன்பே தெரிவிப்பர். சாஸ்திர சம்பிர தாயங்களில் விற்பன்னராக இருப்பர். கலைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டு இருக்கும் வேலையை உதறிவிட்டு விடுவர். எந்த வேலையையும் ஆரம்பித்தால் முடிக்காமல் விடமாட்டார்கள். பூலோக சுகங்கள் கிடைத்த வண்ணமிருக்கும். நல்ல மனோதிடம் படைத்த இவர்கள் C, G, L, S போன்ற முதல் எழுத்துடையவர்களிடம் வீண், வம்பு, வழக்குகளுக்கு செல்லாமல் இருந்தால் கோர்ட்டு, வழக்குகள் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். மந்திரம், தந்திரம், மாயாஜாலம் மனதிற்கு பிடித்த விஷயம்.
கல்வியிலும் சிறந்து விளங்கும் இவர்களுக்கு உயர் பதவிகள் பல வந்து சேரும். அவ்வப்பொழுது ஏற்படும் தோல்விகளை துரத்திவிடுவர். இளமை காலங்கள் இனிமையான காலம் என்பர். முதுமை என்பது பேச்சில் கூட பிடிக்காது. திடீரென கோபப்படுவது இவர்களின் எதிரியாகும், இதனால் பல காரியங்கள் பாதியில் நின்றுபோக வாய்ப்புள்ளது. பிறந்த தேதிக்கேற்ப பெயர் எழுத்தான ‘U’ என்ற பாசிடிவ் ஆக துவங்குகிறதா என அவசியம் பார்த்துக் கொள்வதால் பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். புகழுக்கு அடிபணியும் இவர்கள் யாரையும் பாராட்ட தயங்குவர். முக வசீகரம் படைத்த இவர்களுக்கு மேலும் மேலும் பொலிவேற்ற மேக்கப் போட்டுக் கொள்வது மிகவும் பிடிக்கும். கலைகளை கரைத்து குடித்திருக்கும் இவர்கள் திறமையாக பிழைத்துக் கொள்வர்
ஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க