புதன் கேட்டை நட்சத்திரத்திற்கு செல்வதால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ராஜயோகம்: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் போலவே நட்சத்திர மாற்றங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மற்ற நட்சத்திரங்களை விட சில நட்சத்திரங்கள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு நட்சத்திரம்தான் கேட்டை. மற்ற நட்சத்திரங்களில் நுழைவதை விட கிரகங்கள் கேட்டை நட்சத்திரத்தில் நுழையும் போது அதிக நன்மைகளைத் தருவதாக நம்பப்படுகிறது.

தற்போது புதன் கேட்டை நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், கேட்டை நட்சத்திரத்தில் நுழைவதால், 3 ராசிக்காரர்களை விட்டு கெட்ட நேரம் ஓடப்போகிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அளவில்லாத நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற முடியும். அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் தற்போது துரதிர்ஷ்டமான காலத்தை அனுபவித்து வரும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல காலம் பிறக்கப்போகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக பல நன்மைகள் காத்திருக்கின்றன. இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் பெரும்பாலான நிதிச் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைய முடியும். இந்த ராசிக்காரர்களின் வீடு வாங்கும் கனவு இப்போது நிறைவேறலாம். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

துலாம்

இந்த நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீண்ட நாட்களாக விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும்.கடன் சுமைகள் பாதியாக குறைய வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் ஷாப்பிங் செல்ல நேரிடும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்புமிக்க பொருட்களை பரிசாக வழங்கலாம். நண்பர்களால் இப்போது முக்கிய உதவி கிடைக்கும். நல்ல நட்பு உங்களுக்கு ஆறுதல் தரும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கிடைக்கும் லாபத்தால் சேமிப்பு வெகுவாக அதிகரிக்கும்.

கும்பம்

புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும். கடந்த காலங்களில் அவர்களை புண்படுத்தியவர்கள் இப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். நிதி சிக்கல்கள் குறைந்து வாழ்க்கையில் அமைதி நிலவும்.

வாழ்க்கையில் அவர்களின் இலட்சியத்தை நோக்கிய பயணம் வேகமெடுக்கும். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இது அவர்களை சரியான திசையில் நடக்க உதவும். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பல நிதி நன்மைகள் உங்களை நோக்கி வரலாம், இதனை சரியாகப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் வளமாக வாழலாம். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். புதிய சொத்து வாங்குவதன் மூலம் அவர்களின் அந்தஸ்து உயரும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles