கடந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது லொஸ்லியாவின் தந்தை வந்து அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான்.
இது மக்களுக்கு மட்டுமின்றி தொகுப்பாளராக இருக்கும் கமலுக்கே கடந்த வார காட்சி ஒரு திகில் படம் பார்த்ததாகவே இருந்தது.
இந்நிலையில் லொஸ்லியாவை ஆரம்பத்தில் கண்டித்து பேசிய அவரது தந்தை, தனது தவறை நினைத்து மன்னிப்பு கேட்ட பின்பு சாந்தமானார்.
வெளியே செல்லும் போது கூட கவின் சோகமாக இருப்பதை அவதானித்து அவருக்கு ஆறுதல் கூறியது பயங்கர ஹைலெட்டாக இருந்தது.
இவ்வாறு லொஸ்லியாவிடம் பேசிக்கொண்டிருக்கையில், கமல் முன்பு எப்படி கால் மேல் கால் போட்டு அமரலாம் என்ற கேள்வியினை எழுப்பினார்.
தற்போது அந்த கேள்விக்கு பதிலளித்த கமல், கால் மேல் கால் போட்டு அமருவதால் மரியாதை என்றும் கெடாது. காலம் மாறிக்கொண்டிருக்கின்றது. நமக்குக் கிடைத்த கல்வியும், அவர்களுக்கு கிடைக்கும் கல்வியும் ஒன்று அல்ல வேறு வேறே… டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் அவர்களுக்கு மரியாதை மனதிலிருந்தால் போதும். உங்களது உடைக்கு எப்படி அமருவது செளகர்யமோ அப்படி அமர்ந்து கொள்ளுங்கள் என்று கமல் கூறியுள்ளார்.