Oscars 2024 : ஆஸ்கர் மேடையில் ஆடையின்றி நின்ற ஜான் சீனா! அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..

Oscars 2024 : ஆஸ்கர் மேடையில் ஆடையின்றி நின்ற ஜான் சீனா! அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..
Oscars 2024 : ஆஸ்கர் மேடையில் ஆடையின்றி நின்ற ஜான் சீனா! அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி, வருடா வருடம் உலக சினிமா ரசிகர்களையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பெரிய நிகழ்வாக கருதப்படும். ஓராண்டில் உலக சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்களுக்கு இந்த விருது நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரிவிலும் பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள், விருது கொடுப்பதற்காக மேடை ஏறுபவர்கள் என, பலர் ரசிகர்களை கலகலப்பாக வைத்துக்கொள்வதற்காக மேடையில் சில விஷயங்களை செய்வதுண்டு. அந்த வகையில், ஜான் சீனா செய்துள்ள ஒரு விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஸ்கர் மேடையில் ஆடையின்றி நின்ற ஜான் சீனா..

உலகம் முழுவதும் குத்துச்சண்டை வீரராகவும், அமெரிக்க நடிகராகவும் அறியப்படுபவர், ஜான் சீனா. ஆஸ்கர் விருதுகள் விழா, அமெரிக்காவில் உள்ள டால்பி தியேட்டரில் நடைப்பெற்றது. இதில், பல்வேறு படங்கள் பல்வேறு துறைகளுக்கு விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. உலகளவில் பிரபலமான பல ஹாலிவுட் கலைஞர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை, பிரபல ஆங்கில நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார்.

அப்போது, சிறந்த ஆடை வடிவமைப்பு இருந்த படத்திற்கான விருதை வழங்க அவர், ஜான் சீனாவை மேடைக்கு அழைத்தார். அப்போதே அவர் ஜான் சீனா ஆடையின்றி மேடைக்கு வரப்போவதாக கூறினார். “ஒருவர் இப்போது மேடையில் ஆடையின்றி நின்றால் எப்படியிருக்கும் என நினைத்து பார்த்ததுண்டா? அது பைத்தியக்கார தனமாக இருக்காது?” என்று அவர், பின்பு “இல்லை இல்லை. என் மனதை மாற்றிக்கொண்டேன். எனக்கு இது சரியாக தோன்றவில்லை. இது மிகவும் தொன்மையான விருது நிகழ்ச்சி. இது போல யாராவது ஜோக் செய்ய நினைத்தால் அவர்கள் அவமானப்பட வேண்டும்” என்று தமாஷாக கூறினார்.

சரி, இவர் வெறும் ஜோக்தான் செய்கிறார் என்று பார்த்தால் ஜான் சீனா உண்மையாகவே ஆடையின்றி மேடையில் காட்சியளித்திருக்கிறார். தனது பிறப்புறுப்பை மட்டும் ஒரு பலகையை வைத்து மறைத்தபடி அவர் மேடையில் நின்றிருக்கிறார். “ஆடைகள்..அவை வாழ்வில் மிக மிக முக்கியமானவை..” என்று அவர் கூற, பலர் அவரை பார்த்து சிரித்து கைத்தட்டினர். சில விநாடிகள் லைட் ஆஃப் ஆக, அந்த குறுகிய சமயத்தில் சிலர் வந்து அவருக்கு ஒரு ஆடையை மாட்டி விட்டனர். அதன் பிறகு அவர், சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதினை, ‘புவர் திங்க்ஸ்’ (Poor Things) படத்திற்கு வழங்கினார்.

ரசிகர்கள் ஷாக்..

ஜான் சீனாவின் இந்த செயல், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருது நிகழ்ச்சியில் இருந்தவர்கள் அவருக்கு சியர் அப் செய்தாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர், “என் தலைவன இப்படி பண்ணிட்டீங்களே டா..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர் (John Cena Oscars 2024 Tamil News).

ஏற்கனவே ஆடையின்றி சென்றவர்..

1974ஆம் ஆண்டு, 46வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில், எலிசபெத் டெய்லர் என்ற நடிகையை மேடைக்கு விருது வழங்குவதற்காக அழைத்த போது, ஆடையின்றி ஒரு மனிதர் இரண்டு விரல்களை காண்பித்து போஸ் கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை கிளப்பியது. தற்போது, 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருவர் ஆடையின்றி ஆஸ்கர் விருது மேடையில் நிற்பது எதிர்பாராத நிகழ்வு போல அல்ல என பலர் கருத்துகளை கூறி வருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles