பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தின் கடைசி நாளான இன்று எவிக்ஷன் நாள் என்பதால் வீட்டை விட்டு முதலாவதாக வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் இன்றைய நாளுக்கான விறுவிறுப்பான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.

இந்த காணொளியில் கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும், மக்களும் யாரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென விரும்புகிறார்கள் தெரியுமா? என்று ஒரு ட்விஸ்ட் ஆன கேள்வியை கேட்ட வீட்டில் இருக்கும் அத்தனை போட்டியாளர்களும் குழப்பத்தில் வெறித்து வெறித்து கமலின் முகத்தை உற்று நோக்குகிறார்கள்.

ஆனால் ஷாக்ஷியின் முகத்தில் மட்டும் ஒரு விதமான மரண பயம் தெரிகிறது. அவர் பயந்து பார்த்ததும் அடுத்த ஷாட்டை கமலுக்கு வைக்க அவர் கோபத்துடன் சாக்ஷியை பார்க்கிறார். இதனை வைத்து பார்க்கையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது சாக்ஷி தானோ? என கேள்வி எழுந்துள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here