ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறார்கள். அதுபோல், சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இந்த 2 படங்களில் முதலில் வரப்போகும் படம் எது என்ற குழப்பம் நீடித்து வந்தது.
கடைசியாக ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸ் என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து பட ரிலீஸ் வேலை நடந்து வருகிறது. பட டீசரும் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது.
@LycaProductions has not conveyed anything to anyone regarding #Kaala release date. We are not responsible for any statements arising on release date speculations
— Lyca Productions (@LycaProductions) March 21, 2018
இந்நிலையில், டிஜிட்டல் பிரச்சனை காரணமாக கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் 16ம் தேதி முதல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
அதுபோல், திரையரங்கு உரிமையாளர்களும் கேளிக்கை வரியை எதிர்த்து 16ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கியிருக்கிறது. அடுத்த மாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காலா பட ரிலீஸும் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. “நாங்கள் யாரிடம் காலா பட ரிலீஸ் தேதி பற்றிய செய்தியை கூறவில்லை. அது பற்றி பரவும் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.