வனிதா பீட்டர் பால் திருமண விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருமணம் குறித்து பேசியவர்களை எல்லாம் சரமாரியாக விளாசி தள்ளினார் வனிதா. நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் என பலரையும் விளாசினார்.
இதெல்லாம், ஒரு பக்கம் இருக்க, வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராஜமாதா சிவகாமி தேவி கெட்டப்பில் சிவப்பு நிற சேலையில் கலக்கப்போவது யாரு செட்டில் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு ராஜமாதா சிவகாமி தேவி என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்து செம காண்டாகியுள்ளனர் நெட்டிசன்கள். இது என்ன பாகுபலிக்கு வந்த சோதனை என்றும் சிவகாமி தேவிக்கு வந்த சோதனை என்றும் ஆதங்கப்பட்டுள்ளனர். பலர் இது அந்த சிவனுக்கே அடுக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
சில நெட்டிசன்கள் இந்த போட்டோவை பார்த்ததுமே சிரித்துவிட்டேன் என்றும் கமெண்ட்ஸ் ஆஃப் பண்ண மறந்துட்டீங்களே பீட்டர் தேவி என்றும் கிண்டலடித்துள்ளனர்.
இது சிவகாமி தேவி போன்று இல்லை என்றும் மாறாக சந்திமுகி போன்று உள்ளது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். குறிப்பிட்ட நெட்டிசன்களின் வைரல் ட்ரோல் காட்சியினை காணலாம்…



