
சிறுயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நெய் தயக்கம் இல்லாமல் உணவில் அதிகமாக சேர்க்கப்படும் பொருளாகும். நே சாதம், பராத்தா, நான் அல்லது ரொட்டி என அனைத்து வகையான உணவிலும் நெய் சேர்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நெய் பல உணவுகளை சுவையாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், பலரும் நெய்யை முகத்திலும் பயன்படுத்துகின்றனர். அப்படியானால், முகத்தில் நெய் தடவுவது உண்மையில் பலனளிக்குமா? உண்மையில், முகத்தில் நெய் தடவினால் சரும பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெற முடியுமா? நெய்யில் இருக்கும் சத்துக்களை பற்றி பேசுகையில், வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, மேலும் இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இதில் காணப்படுகின்றன. மேலும், நெய்யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கவும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நெய்யை முகத்தில் தடவுவது கட்டாயம் பயனளிக்கும்.
முகத்தில் நெய் எப்படி பயன்படுத்துவது
நெய்யை முகத்தில் தடவுவதன் மூலம் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, சரும வறட்சி பிரச்சனையும் நீக்கவும் இந்த நெய் உதவும். இது சருமத்திற்கு வயதான எதிர்ப்பு பண்புகளையும் வழங்குகிறது. அதே சமயம், நெய்யை பயன்படுத்துவதால் சருமத்திற்கு பொலிவும் கிடைக்கும்.
இப்போது இந்த நெய் எப்படி முகத்தில் தவவுவது என்று பார்த்தால், இதற்கு முதலில் உள்ளங்கையில் 2 சொட்டு நெய்யை எடுத்துக்கொண்டு முகத்தில் நன்றாக தடவவும். நெய்யை விரல்களால் கண்களுக்கு அடியில் தடவினால் கருவளையங்கள் குறைய ஆரம்பிக்கும். அதேபோல் உங்களது சருமம் மிகவும் வறண்டிருந்தால், உங்கள் முகத்தில் நெய்யை இரவு முழுவதும் முகத்தில் தடவி வைக்கலாம். சருமம் சாதாரணமாகவோ அல்லது எண்ணெய் பசையாகவோ இருந்தால், அதை உங்கள் முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவவும்.
நெய்யை சருமத்தில் தடவுவதுடன், ஃபேஸ் பேக் வடிவிலும் பயன்படுத்தலாம். இரண்டு ஸ்பூன் மாவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் சில துளிகள் பால் சேர்க்கவும். பின்னர் இதை நன்கு கலந்து ஃபேஸ் பேக் வடிவில் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து பின்னர் முகத்தை கழுவவும். இவை சருமத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை குறைந்து, சருமத்தை பளபளப்பாக உதவும்.
வறட்சியான உதட்டால் அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும். மேலும், உதட்டின் மேல் வெள்ளை வெள்ளையாக தெரிவதால் உங்கள் அழகே கெடும். இதற்குத் தீர்வாக பலரும் லிப் பாம்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நெய் தடவி வந்தால் இந்த வறண்ட தன்மை நிச்சயமாக மாறும்.