உடலுறவு செய்தால் உடல் எடை குறையுமா… நிபுணர்கள் கூறுவது என்ன?

உடலுறவு செய்தால் உடல் எடை குறையுமா... நிபுணர்கள் கூறுவது என்ன?
உடலுறவு செய்தால் உடல் எடை குறையுமா… நிபுணர்கள் கூறுவது என்ன?

நவீன காலகட்டத்தில் உடல் பருமன் காரணமாக இளைஞர் தலைமுறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுமுறை மாற்றம், வாழ்க்கை சூழலில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்டவை இந்த உடல் பருமனுக்கு காரணமாக கூறப்படுகின்றன. உடல் பருமன் இதயம் சார்ந்த நோய்களையும், நீரிழிவு பிரச்னையையும் ஏற்படுத்தும் பல மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கை விடுகின்றன. உடல் பருமனை தடுக்க பலரும் பல வழிகளை கடைபிடிக்கின்றனர்.

உடல் எடையை குறைக்க.

உடல் பருமன் ஒருபுறம் என்றால் உடல் பருமனை குறைக்க, அதாவது உடல் எடை குறைப்புக்காக ஜிம் தொடங்கி ஆர்க்கானிக் உணவுகளை சாப்பிடுவது என பல வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கும் முறைகளை மட்டுமின்றி சில ஆபத்தான முறைகளையும் சிலர் பின்பற்றுகின்றனர். மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றவதே உடல் எடை குறைப்பில் உபயோகமாக இருக்கும்.

பல வழிகள் இருந்தாலும் தங்களுக்கு ஏற்ற மற்றும் விரைவாக உதவியளிக்கும் முறைகளை பின்பற்றவே மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், நீங்கள் காலையில் எழுந்து நீண்ட தூரம் ஒடுவதை போன்றும், கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை போன்றும் உடலுறவு மேற்கொள்வதும் உங்களின் உடல் எடை குறைப்பு முயற்சியில் நல்ல பலனை கொடுக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.

உடலுறவில் ஈடுபட்டால் குறையும் கலோரி

ஆம், இதுகுறித்து பாலியல் கல்வியாளர்கள் சிலரும், உடலுறவு உடல் எடைக்குறிப்பிலும் உங்களுக்கு உதவும் என தெரிவிக்கின்றனர். உடலுறவும், ஜாக்கிங், ரன்னிங்கை போன்ற கார்டியோ வகை உடற்பயிற்சிதான் என்றும், உடலுறவில் ஈடுபடும்போது உடல் சார்ந்த இயக்கத்தால் இதயத்துடிப்பு சீராகும், கலோரிகளும் குறையும் எனவும் தெரிவிக்கின்றனர்.

2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, ஆரோக்கியமான நீண்ட உடலுறவின்போது ஆண்கள் மொத்தமாக 101 கலோரிகளையும், அதாவது நிமிடத்திற்கு 4.2 கலோரிகளையும் குறைக்கலாம் என்றும் பெண்கள் மொத்தமாக 69 கலோரிகளையும் குறைக்கலாம், அதாவது நிமிடத்திற்கு 3.1 கலோரிகள். இந்த கணக்கீடு 24 நிமிடங்கள் வரை நீடிக்கும் உடலுறவை குறிக்கிறது.

ஆரோக்கியமான உடலுறவு

மேலே குறிப்பிட்ட இந்த கலோரிகளை குறைப்பதில், உடலுறவின் தீவிரம், அதன் கால அளவு, உடலுறவின் வேகம் மற்றும் அதன் வகையை பொருத்து மாறுபடும் எனவும் தெரிவிக்கின்றனர். சராசரியாக 80-300 கலோரிகள் குறையும் என கூறுகின்றனர். இந்த 300 கலோரிகள் என்பது மிக அதிகம்தான். உங்கள் உடல் எடையில் 1 கிலோ என்றால் 7,700 கலோரிகள் ஆகும். எனவே, ஒரு ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட்டால் 0.034 கிலோ குறையும் என கூறப்படுகிறது.

அந்த வகையில், நீங்கள் வழக்கமான அனைத்து உடல் எடை குறைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் சீரான இடைவெளியில் உடலுறவில் ஈடுபட்டாலும் அது உங்களின் உடல் எடை குறைப்பில் கூடுதல் நன்மையை தரும் எனலாம். கால அளவை அதிகரிப்பதன் மூலமும், அதிக உடலசவை தரும் போஸிஷன்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், உடலுறவை மேற்கொள்வதன் முன் நெருக்கமாக இருப்பதும் ஆரோக்கிய உடலுறவுக்கு எடுத்துச்சென்று, உடல் எடை குறைப்பில் இன்னும் உதவிகரமாக இருக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles