Guru Peyarchi 2024: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களிலேயே சனி மற்றும் ராகு கேதுவிற்கு அடுத்ததாக நீண்ட காலம் ஒரு ராசியில் பயணிக்கக்கூடியவர் குரு என்பதால், குருவின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் குரு பெயர்ச்சியானது வளர்ச்சி, முன்னேற்றம், காதல் வாழ்க்கை, ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தைகள் ஆகியவற்றில் காணப்படும். தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 01 ம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார்.
குரு பெயர்ச்சி 2024: மே 1 முதல்
ரிஷப ராசியில் குரு நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது 2024 குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சிக்கு பின் தங்கள் வாழ்க்கையில் வெற்றியுடன், முன்னேற்றத்தையும் பெறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். மே மாதத்திற்கு பின் முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் எங்கு முதலீடு செய்வதாக இருந்தாலும், நன்கு யோசித்த பின்னரே செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நிதி இழப்பை தவிர்க்கலாம்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் பந்தய சந்தையில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். பணத்தை முதலீடு செய்வதற்கு பதிலாக சேமிக்க முயற்சிக்க வேண்டும். இதனால் நிதி நிலைமை மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் உயரும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் பணம் தொடர்பான விஷயங்களில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற வேண்டும். இப்படி செய்தால் நிதி நிலையை வலுப்படுத்த முடியும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஏற்கனவே எங்கேனும் முதலீடுகளை செய்திருந்தால், மே முதல் நல்ல வருமானத்தைப் பெறக்கூடும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எதிர்பாராத திடீர் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக, உங்கள் நிலை வலுவடையும். ஆனால் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
இந்த குரு பெயர்ச்சியானது அனைத்து ராசி அன்பர்களுக்கு எவ்வாறு பலனளிக்கும் என்பதை காண்போம்.
கீழே 12 ராசிக்கும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது
![]() | ![]() | ![]() |
|---|---|---|
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |















