அதிர்ஷ்டம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும், ஆனால் அனைவருக்கும் அது கிடைப்பதில்லை என்பதே உண்மை. அதிர்ஷ்டம் எப்பொழுதும் ஒரே இடத்தில் இருக்காது அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். நாம்தான் நமக்கு அதிர்ஷ்டம் வரும்போது அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Guru palan 2019-2020

ஜோதிட சாஸ்திரம் நமது வாழ்வில் அனைத்து அம்சங்களையும் விளக்கக்கூடியது, அதில் அதிர்ஷ்டம் ஒன்றும் விதி விலக்கல்ல. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. அதேபோல வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரே கிரகத்தால் ஆளப்படுகிறது. அதன்படி உங்கள் ராசிக்கு வாரத்தின் எந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தால் கூற இயலும். இந்த பதிவில் உங்கள் ராசிக்கான அதிர்ஷ்டமான நாள் எது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது ஆர்வம், உறுதி மற்றும் உந்துதலை ஊக்குவிக்கும் கிரகம். செவ்வாய் கிழமையும் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த நாளில் மேஷ ராசிக்காரர்கள் தொடங்கும் வேலை அவர்களுக்கு உறுதியை வழங்குவதோடு வெற்றிகரமானதாக முடியும். புதிய வேலைகளை ஒப்புக்கொள்ளவும், இருக்கும் வேலைகளை முடிக்கவும் மேஷ ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமான நாளாகும்.

ரிஷபம்

ரிஷப ராசியானது கவர்ச்சிகரமான சுக்கிரனால் ஆளப்படுகிறது. இவர் ஆளும் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமை பொதுவாக கொண்டாட்டங்களுக்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது, இது பலரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு நாளாகும். காதலையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கும் கிரகம் இதுவாகும். ரிஷப ராசிக்காரர்கள் எந்த செயலையும் தொடங்குவதற்கு வெள்ளிக்கிழமை மிகவும் அதிர்ஷ்டமான நாளாகும்.

மிதுனம்

மிதுன ராசி புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. புதன் கிரகம் புதன்கிழமையை ஆளும் கிரகமாகவும் இருக்கிறது. இந்த நாளில் புதிய பேச்சுவார்த்தையை தொடங்குவது உங்களுக்கு நல்ல முடிவுகளை தரும். சிறந்த பேச்சாற்றல் கொண்ட இவர்கள் இந்த நாளில் ஒப்பந்தம் செய்வது, பயணம் செய்வது போன்றவை இவர்கள் எதிர்பார்க்கும் முடிவை வழங்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், அக்கறை செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சந்திரனால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு ராசியான நாள் என்றால் அது திங்கள் கிழமைதான். மற்றவர்களுக்கு திங்கள் கிழமை மோசமான நாளாக இருந்தாலும் இவர்களுக்கு அது அதிர்ஷ்டம் கொட்டும் நாளாக இருக்கும். உங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிடும் வேலைகளை இந்த நாளில் தொடங்குவது உங்களுக்கு நல்லது.

சிம்மம்

சிம்ம ராசி சூரியனால் ஆளப்படும் ராசியாகும். சூரியனின் பிரகாசமான ஆற்றல் ஞாயிற்றுக்கிழமையை ஆட்சி செய்கிறது. வாழ்க்கைக்கு ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் வழங்கும் நாளாக ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் தன்னை வளர்த்துக்கொள்ள தேவையான முயற்சிகளையும், சாகசங்களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்துக்கொள்வது நல்லது.

https://www.thinatamil.com/2019/05/29/punarpoosam-natchathiram-rasi-palan-in-tamil/
கன்னி

மிதுன ராசியை போலவே கன்னி ராசியும் புதன் கிரகத்தால் ஆளப்படுவதாகும். புதன் கிரகத்திடம் இருந்து கன்னி ராசிக்கு கிடைக்கும் ஆற்றல் மாறாதது. புதன் ஆளும் நாள் புதன் கிழமை ஆகும். இந்த நாள் அவர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும் நாளாக இருக்கும். நீதிமன்றம் தொடர்பான வேலைகள், உடற்பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை இந்த நாளில் தொடங்குவது முடிவை இவர்களுக்கு சாதகமாக மாற்றும்.

துலாம்

துலாம் ராசியும் ரிஷப ராசியை போல அன்பான கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதாகும். துலாம் ராசி காற்றின் சின்னமாகும், சுக்கிரனால் இவர்கள் அறிவார்ந்தர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் வெள்ளிக்கிழமையாகும். இது கொண்டாட்டத்திற்கு சிறந்த நாளாகும். இந்த நாளில் துலாம் ராசிக்காரர்கள் சமநிலையாகவும், தெளிவாகவும் இருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மேஷ ராசிக்காரர்களை போல செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதாகும். இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் செவ்வாய் கிழமையாகும். இது அவர்களுக்கு முழுமையான வெற்றியை வழங்கும் நாளாக இருக்கும். இவர்களின் உறுதி இவர்கள் தொடங்கும் வேலையை வெற்றிகரமானதாக மாற்றக்கூடும். எனவே இவர்கள் விரைவில் முடிக்க நினைக்கும் வேலையை செவ்வாய் கிழமையில் தொடஙங்குவது நல்லது.

தனுசு

தனுசு என்பது நம்பிக்கைக்கான சின்னமாகும். இது குருவால் ஆளப்படும் ராசியாகும். குரு பகவான் செழிப்புக்கு காரணமாக இருக்கும் கடவுளாவார். இவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வியாழக்கிழமை மிகவும் சிறந்த நாளாகும். தொழில்ரீதியான சந்திப்புகள், பயணங்கள் போன்றவற்றை மேற்கொள்ள வியாழக்கிழமை அற்புதமான நாளாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்கள் கடுமையான கிரகமான சனிபகவனால் ஆளப்படுகிறார்கள். சனிபகவானால் ஆளப்படுவதால் இவர்களுக்கு அதிஷ்டமான நாள் சந்தேகமே இல்லாமல் சனிக்கிழமைதான். இந்த நாளில் இவர்கள் தொடங்கும் வேலைகள் இவர்களுக்கு வெற்றியை வழங்குவதாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியும் மகர ராசியை போலவே சனிபகவனால் ஆளப்படுவதாகும். ஆனால் இதன் காற்று குணங்களால் இது மிகவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். இவர்கள் இயற்கையிலேயே அதிக கற்பனைத்திறன் உள்ளவர்களாகவும், கண்டுபிடிப்பாளராகவும் இருப்பார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் சனிக்கிழமைதான். புதிய ஐடியாக்களை பரிசோதிக்க இவர்களுக்கு இதுதான் சிறந்த நாளாகும்.

மீனம்

மீனா ராசிக்காரர்கள் தனுசு ராசியை போன்றவர்கள், இவர்களுக்கும் ராசியான நாள் வியாழக்கிழமைதான். இந்த நாள் இவர்களுக்கு புது ஆற்றலை வழங்கக்கூடியதாகும். இந்த நாளில் இவர்கள் அதிக புத்திக்கூர்மையுடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்படுவார்கள். எனவே அவர்கள் எந்த வேலையையும் வியாழக்கிழமையில் தொடங்குவது நல்லது.