2025ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: 3 ராசிக்காரங்க ராஜ வாழ்க்கை வாழப்போறாங்க..

ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டின் மே மாதம் வரை இருப்பார். அதன் பின் புதனின் ராசியான மிதுன ராசிக்குள் நுழைவார்.

2025ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: 3 ராசிக்காரங்க ராஜ வாழ்க்கை வாழப்போறாங்க..
2025ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: 3 ராசிக்காரங்க ராஜ வாழ்க்கை வாழப்போறாங்க..

குரு பகவான் 2025 ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டும் ராசியை மாற்றப் போவதில்லை, 3 முறை ராசியை மாற்றவுள்ளார். அதில் மே 15 ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைவார். அதன் பின் அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடக ராசிக்குள் நுழைவார். பின்பு டிசம்பர் 04 ஆம் தேதி வக்ர நிலையில் மிதுன ராசிக்குள் மீண்டும் நுழைவார். இப்படி 2025 ஆம் ஆண்டில் 3 முறை குருவின் நிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது.

இப்படியான குருவின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, பல வழிகளில் நல்ல நிதி ஆதாயத்தைத் தரப்போகிறது. இப்போது 2025 ஆம் ஆண்டில் 3 முறை குருவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

2025 ஆம் ஆண்டில் நிகழும் குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். பரம்பரை தொழில் செய்து வருபவர்கள் 2025 ஆம் ஆண்டில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இந்த ஆண்டில் நல்ல செய்திகளை அதிகம் பெறுவீர்கள். முக்கியமாக இந்த ஆண்டில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும்.

மிதுனம்

2025 ஆம் ஆண்டில் நிகழும் குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும்.

சிம்மம்

2025 ஆம் ஆண்டில் நிகழும் குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குழந்தைகளால் பெருமைப்படுவீர்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிறைய செல்வத்தை சேமிக்க முடியும். உடன் பிறந்தவர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆனால் ஆண்டின் இறுதியில் பண பிரச்சனைகளை சிறிது சந்திக்க நேரிடலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles