மீனத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பதவி… வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

மீனத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பதவி... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்
மீனத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பதவி… வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இது தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இன்னும் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன.கிரகங்களின் பெயர்ச்சிகள் முக்கியமான ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. உலக இன்பம், பணம், திருமண வாழ்க்கை, பேச்சாற்றல், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படும் சுக்கிரன் இன்னும் சில நாட்களில் தனது ராசியை மாற்றவுள்ளார். சுக்கிரன் பெயர்ச்சியாகும் போதெல்லாம் மனிதர்களின் இந்த பண்புகளில் மாற்றங்கள் ஏற்படும். மார்ச் 31 அன்று தனது உச்ச ராசியான மீனத்தில் பிரவேசிப்பார்.

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். இவர்களது பொருளாதார நிலை மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதியாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிகப்படியான ஏற்றம் இருக்கும். பண வரவிற்கான பலவித வாய்ப்புகள் திறக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீங்கள் போடும் திட்டம் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் நிதி ஆதாயம் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இந்த காலம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வணிகத்தை தொடங்க நினைத்திருப்பவர்கள் இப்பொழுது அதை செய்யலாம். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உங்கள் உறவு சுமூகமாக இருக்கும். முன்னர் செய்த முதலீடுகளால் தற்போது லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்பி கிடைக்கும்.

கும்பம்

சுக்கிரனின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். அவ்வப்போது நிதி நன்மைகள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இதன் காரணமாக உங்கள் பொருளாதார நிலை மேம்படும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்பொழுது திரும்பி கிடைக்கும். பணத்தை மிச்சப் படுத்தி சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும், அலுவலகத்தில் பணிபுரியும் சூழல் நன்றாக இருக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles