வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கவும், வீட்டில் இருக்கும் வறுமையை நீக்கி, செல்வ செழிப்போடு வாழ, பின்சொல்லக்கூடிய முறைப்படி வீட்டில் செலவு செய்ய வேண்டும்.
ஒருவருடைய வருமானத்திலிருந்து முக்கிய செலவாக நாம் செய்ய வேண்டியது பல விஷயங்கள் இருந்தாலும், முதல் செலவாக நாம் செய்யும் விஷயமே அம்மாதம் முழுவதும் நமக்கு பணக்கஷ்டம் இல்லாமல் வைத்திருக்கும் சூட்சம வழியாகும்.
முதலில் என்ன வாங்க வேண்டும்?
நீங்கள் முதல் சம்பளம் வாங்கியவுடன் அல்லது நீங்கள் உங்களுடைய வருவாயை முதல் செலவாக கடைக்கு சென்று கல் உப்பு பாக்கெட் ஒன்றை வாங்குங்கள். இது மகாலட்சுமியின் இருப்பிடமாக இருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் அதனுடன் மல்லிகை பூவையும் உங்களால் முடிந்த மட்டும் வாங்கி வந்து வீட்டில் இருப்பவர்களுக்கும், சுவாமி படத்திற்கும் போட்டு விடுங்கள்.
வண்டி, வாகனம் வைத்திருப்பவர்கள் அதற்கு கொஞ்சம் மல்லிகை பூ வையுங்கள். இது போல உங்களுடைய வருமானத்தில் முதல் செலவாக உப்பும், மல்லிகை பூவும் வாங்கி இவ்வாறு செய்வதால் அம்மாதம் முழுவதும் வீண் விரயம் ஏற்படாமல் வரவானது வந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் பணத்தை ஈட்டக்கூடிய பல்வேறு பாதைகளும் திறக்கப்படுமாம்.
வீட்டில் தீராத பணக்கஷ்டமா? சம்பளத்தில் முதல் செலவாக இதை வாங்குங்க! அதிர்ஷ்டம் கொட்டுமாம்
அதே போல பணவரவையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்யும் இந்த கல் உப்பையும் வீட்டு வாசலில் வைப்பார்கள்.
வீட்டு வாசலில் பொதுவாக ஒரு ஓரமாக ஒரு கிண்ணத்தில் உப்பு நிறைய போட்டு வைத்தால் கண் திருஷ்டிகள் எதுவும் உள்ளே நுழையாது என்று கூறுவார்கள் அதே போல இந்த முறையிலும் நீங்கள் உப்பு வைப்பதால் குடும்பத்தில் வறுமையை மட்டும் அல்லாமல் சண்டை, சச்சரவுகளும் நீங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
இல்லையென்றால் கடைக்கு சென்று, எண்ணெய் மற்றும் விளக்கு திரி வாங்கி கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டிற்கு நவகிரகங்களின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால், வீட்டில் உள்ளவர்களுக்கு நவக்கிரக தோஷம் நீங்க வேண்டும் என்றால், வீட்டு வாசலில் கிழக்கு திசை பார்த்து தீபம் ஏற்றி வையுங்கள்.
வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனும் பட்சத்தில் வடக்குப் பார்த்தவாறு, வீட்டு வாசலில் தீபம் ஏற்றுங்கள்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்