மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும் இது குருவின் கேரண்டி

மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டி
மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டி

குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. மே மாதம் ரிஷபத்தில் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். குரு பகவான் திருமணம், குழந்தைகள், அதிர்ஷ்டம், மதப் பணி, செல்வம் மற்றும் செழுமை போன்றவற்றுக்கு காரணி கிரகமாக உள்ளார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினு, சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்க்கையில் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

மேஷம்:

ரிஷப ராசியில் குருவின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். உங்கள் தொழிலில் ஒவ்வொரு திருப்பத்திலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பல இடங்களிலிருந்து பல வித வாய்ப்புகளை பெறுவார்கள். திடீர் பண வரவு இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும், திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் பலனால் வருமானம் அதிகரிக்கும். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வித்துறையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வணிக வர்க்கத்தினர் முதலீட்டில் நல்ல லாபம் பெறுவார்கள். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகமாகி அதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும்.

சிம்மம்:

குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். குரு அருளால் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான புரிதல் அதிகரிக்கும். அரசு வேலைகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வியாபாரம் செழிக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோகியம் மேம்படும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles