விஜய்யின் GOAT படத்தில் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! யார் தெரியுமா?

விஜய்யின் GOAT படத்தில் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! யார் தெரியுமா?
விஜய்யின் GOAT படத்தில் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! யார் தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், Greatest Of All Time (GOAT). இந்த படத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

GOAT திரைப்படம்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், முதன் முறையாக வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்த்துள்ள படம், GOAT. ‘ஜாலி’ இயக்குநர் என ரசிகர்களிடம் பெயர் வாங்கிய வெங்கட் பிரபு, இந்த படத்தின் மூலம் விஜய் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மைக் மோகன், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விஜய்யுடன் நடிக்கும் ‘எதிர் நீச்சல்’ தொடர் நடிகை..!

தமிழில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ள தொடர், ‘எதிர் நீச்சல்’. பெண்களையும் அவர்கள் இந்த சமூகத்தில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் காண்பிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கு, பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இதில், முக்கிய கதாப்பாத்திரங்கள் பல இருந்தாலும், ரசிகர்களின் மனங்களில் நல்ல இடத்தை பிடித்த கேரக்டர்கள் என சில மட்டுமே உள்ளன. அப்படி, பலர் மனதில் ‘ஈஸ்வரி’ எனும் கதாப்பாத்திரமாக பதிந்து போனவர், கனிகா.

Ethirneechal ezgif.com avif to jpg converter |

பயந்த சுபாவம் கொண்ட மருமகளாக தோன்றி, தற்போது இவரும் இந்த சீரியலில் உள்ள புரட்சி பெண் கதாப்பாத்திரமாக இருக்கிறார். கனிகா, தற்போது நடிகர் விஜய்யுடன் GOAT படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபுவுடன் புகைப்படம்..

GOAT படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ள வெங்கட் பிரபுவுடன் கனிகா புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இவரும் GOAT படத்தில் நடிப்பதாக கூறி வருகின்றனர். இவர், உண்மையாகவே இப்படத்தில் நடித்துள்ளாரா, அல்லது யாருக்கேனும் டப்பிங் பேசியுள்ளாரா என்பது நாட்கள் கடந்தால்தான் தெரியும்.
Ethirneechal2 ezgif.com avif to jpg converter |

யார் இந்த கனிகா?

மதுரையில் பிறந்து வளர்ந்தவர், கனிகா. திவ்யா என்ற தனது பெயரை திறைத்துறைக்காக மாற்றிக்கொண்டார். இவர், மேடை நிகழ்ச்சிகளிலும் சில படங்களிலும் பாடல் பாடியுள்ளார். மணி ரத்னம் இயக்கதில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் தமிழ்திரையுலகிற்குள் நுழைந்தார் கனிகா. அடுத்து, கிராமத்து பெண் கதாப்பாத்திரம், நகரத்து பெண் கதாப்பாத்திரம் என மாறி மாறி நடித்தார். ‘தளபதி’ படத்தின் கன்னட ரீ-மேக்கிலும் மணி ரத்னம் இயக்கத்தில் நடித்திருந்தார். வரிசையாக இஅவருக்கு தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர், பின்னாளில் அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். இவருக்கு ‘எதிர் நீச்சல்’ தொடர் இழந்த ரசிகர் கூட்டத்தை மீண்டும் பெற்றத்தர வாய்ப்பாக அமைந்தது. சீரியல்களில் நடித்தாலும், படங்களிலும் ஹீரோயின்களுக்கு வாய்ஸ் கொடுத்து வந்தார். 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டுகளில் நாம் பார்த்த படங்களில் இவர்தான் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், இவர் விஜய்யுடன் GOAT படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles