Saturday, July 20, 2024

காதலிப்பவரா நீங்கள்!அடிக்கடி மெசேச் அனுப்பாதீர்கள் .உறவில் விரிசல் ஏற்படலாம்!!..

- Advertisement -
காதலிப்பவரா நீங்கள்!அடிக்கடி மெசேச் அனுப்பாதீர்கள் .உறவில் விரிசல் ஏற்படலாம்!!..
காதலிப்பவரா நீங்கள்!அடிக்கடி மெசேச் அனுப்பாதீர்கள் .உறவில் விரிசல் ஏற்படலாம்!!..

காதலிக்கும்போது, ​​​​காதலர்கள் பரஸ்பரம் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும், துணையை ஈர்க்கவும் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பார்கள். தொடக்கத்தில் ஆண் பெண் இருவருமே தங்கள் காதலை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே பாதிப்பு தான். ஆரம்ப உறவில் கொஞ்சம் எச்சரிக்கையும் தேவை. உங்கள் காதலின் ஆரம்ப கட்டத்தில் உங்கள் துணைக்கு நீங்கள் தொடர்ந்து மெஸ்சேஜ் அனுப்பினால், அது உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தலாம். தங்கள் ஆரம்பக் காதலில் கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஒரு புதிய உறவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தை மனதில் கொள்ளுங்கள்:

காதலர் எல்லா நேரத்திலும் உங்களோடு பேச வேண்டும் அல்லது நீங்கள் எப்போதும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இது சம்பந்தப்பட்ட நபர்களின் விருப்பத்துடன் தொடர்புடையது. எனவே, உங்கள் மகிழ்ச்சிக்காகவும், ஆசைக்காகவும் தொடர்ந்து யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்புவது சரியல்ல . யோசிக்காமல் உங்கள் துணைக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் துணைக்கு மெசேஜ் செய்வதன் மூலம் அவரை நீங்கள் கண்காணிக்க நினைக்கிறீர்களோ என்பது போன்ற பல எண்ணங்கள் எழலாம். அதோடு, உங்கள் மனதிலும், நாம் அனுப்பும் மெஸ்சேஜ்களை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். அவர் எனக்கு பதில் செய்தி அனுப்பாதது ஏன்? அவன் அல்லது அவள் எங்கே இருப்பார்கள்? அருடைய பதில் ஏன் வரவில்லை போன்ற அனாவசியமான எண்ணங்கள் தோன்றலாம். மேலும், இதன் மூலம் நீங்கள் எப்படியாவது நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தம். இது சரியானது அல்ல.

- Advertisement -

காதல் துணைக்கு அடிக்கடி செய்தி அனுப்புவதால் ஏற்படும் பாதிப்புகள்

1.உங்கள் காதல் துணைக்கு தொடர்ந்து செய்தி அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது அந்த நபரைக் கட்டுப்படுத்துவது போன்றது. செய்திகளை அனுப்புவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை நிறுத்துங்கள்.

- Advertisement -

2. நிச்சயமாக, காதல் துணையிடம் இருந்து தகவல் வரவில்லை என்றால் நீங்கள் கவலைப்படலாம். ஆனால் நீங்கள் அடிக்கடி செய்தி அனுப்புவதால் உங்கள் காதலர் எரிச்சலடையலாம். எனவே, உறவை வலுப்படுத்த, அன்பு மற்றும் நினைவாற்றல் இரண்டையும் சமநிலையில் வெளிப்படுத்துவது நல்லது.

3. நீண்ட காலமாக உங்கள் காதல் துணை உங்கள் செய்திக்கு பதிலளிக்கவில்லை என்றால், உடனடியாக அதை தவறாக நினைக்க வேண்டாம். பலர் மெஸ்சேஜ் அனுப்புவதில் அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களாக இருப்பார்க. சிலர் மிகவும் தாமதமாக பதில் அனுப்புவார்கள், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் தொடர்ந்து செய்திகளை அனுப்ப வேண்டாம்.

4. உங்கள் துணையால் உடனடியாக பதிலளிக்க முடியாமல் போகலாம். அவர் சில வேலைகளில் பிஸியாக இருக்கலாம், எனவே அவரது பணியை மனதில் வைத்து செய்திகளை அனுப்பவும்.

5. உங்கள் செய்தி அவசரமாக இருந்தால், அவர்களுக்கு செய்தி அனுப்புவதற்குப் பதிலாக அவர்களை போனில் அழைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால், அவர்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். அதோடு அவர்களும் முக்கியத்துவத்தை உணருவார்கள்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

Tamil Trending News

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? இலகுவான முறை

aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் - அரிசிமா கூழ் செய்வது...

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

Related Articles

error: Content is protected !!