ஜெயம் ரவிக்கு விவாகரத்து! காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..

பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன? இந்த விவாகரத்துக்கு முன்னர் நிகழ்ந்தது என்ன? முழு விவரங்களை இங்கு பார்ப்போம்.

ஜெயம் ரவிக்கு விவாகரத்து! காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..
ஜெயம் ரவிக்கு விவாகரத்து! காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..

ஜெயம் ரவி பதிவு:

ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து ஏற்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தன் மனைவியை பிரிவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்கு பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெயம் ரவி குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜெயம் ரவி தனது ட்வீட்டில் சொல்லியிருப்பவற்றை இங்கு பார்ப்போம்:

“வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

காரணம் என்ன?

ஜெயம் ரவி நடித்து, சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம், சைரன். இந்த படத்தை அவரது மாமியாரும் ஆர்த்தியின் தாயாருமான சுஜாதா தயாரித்திருந்தார். இந்த படத்தை அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்க அவரது மாமியார் திட்டமிட்டிருந்தாராம். அதற்கு, ஜெயம் ரவி சுமார் ரூ.25 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு சம்பளத்தை கொடுக்க முடியாது என சுஜாதா கூறியதாகவும் இதுதான், ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்குள் பிரச்சனை ஆரம்பிக்க காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜெயம்ரவி-ஆர்த்தியின் காதல்:

நடிகர் ஜெயம்ரவி, ஆர்த்தியின் விவாகாரத்து குறித்த தகவல்கள், கடந்த ஜூன் மாதமே வெளியானது. ஆர்த்தி, தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடன் இருந்த புகைப்படங்களை நீக்கியது பலரது சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நேர்காணல்களில் நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது, தன் மனைவியிடம் அவர் கொஞ்சி பேசியதும், “பொண்டாட்டி எனக்கு செல்லம்..” என்று கூறியதும் வைரலானது. அது மட்டுமல்ல, ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே திரை பிரபலங்கள் வரிசையாக விவாகரத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருவது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்து வருகிறது. ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஆரவ்-ஆயன் என்ற இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பது, அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக பலர் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles