ஷங்கர் மகள் திருமணத்தில் குத்து டான்ஸ் ஆடிய அட்லீ-ரன்வீர் சிங்! வைரல் வீடியோ..

ஷங்கர் மகள் திருமணத்தில் குத்து டான்ஸ் ஆடிய அட்லீ-ரன்வீர் சிங்! வைரல் வீடியோ..
ஷங்கர் மகள் திருமணத்தில் குத்து டான்ஸ் ஆடிய அட்லீ-ரன்வீர் சிங்! வைரல் வீடியோ..

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், ஷங்கர். தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வரும் அவர், ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவரது மகள், ஐஸ்வர்யாவிற்கு திருமணம் ஆகியிருக்கிறது.

ஷங்கரின் மகளுக்கு திருமணம்:

இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில், இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் எம்.பி.பி.எஸ் படித்து முடித்து விட்டு, சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். இவர் நடித்த முதல் படமான ‘விருமன்’ 2022ஆம் ஆண்டு வெளியானது. ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்குதான் தற்போது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இதில், இந்திய திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

திருமண விழா:

ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது. ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தருண் கார்த்திகேயன் என்பவரை கரம் பிடித்திருக்கிறார், ஐஸ்வர்யா. தருண் கார்த்திகேயன், உதவி இயக்குநர் மட்டுமன்றி பாடல் ஆசிரியர் மற்றும் பாடகரும் கூட. ஐஸ்வர்யா-தருண் கார்த்திகேயனின் திருமண முகூர்த்தத்தில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். நயன்தாரா, விக்ரம், ரஜினிகாந்த், சூர்யா, கமல்ஹாசன், மணிரத்னம், சுஹாசினி உள்ளிட்டோர் இந்த திருமண முகூர்த்தத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து, நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்..

ஐஸ்வர்யா-தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் ரன்வீர் சிங், அட்லீ, ஏ.ஆர்.ரஹ்மான், மோகன் லால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது தமிழ் பாடல்களுக்கு நடிகர் ரன்வீர் சிங், அதிதி ஷங்கருடன் சேர்ந்து குத்து டான்ஸ் ஆடினார்.

வைரல் வீடியோ..

அதிதி ஷங்கர், ஐஸ்வர்யா ஆகியோருடன் இயக்குநர் அட்லீ, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் சேர்ந்து விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடினர்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியாே..

மாமதுர பாடலுக்கு நடனமாடிய வீடியோ..

View this post on Instagram

A post shared by Shankar (@director.shankar08)

ரன்வீர் சிங் நடனமாடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டாவது திருமணம்..

ஐஸ்வர்யா ஷங்கருக்கு இது இரண்டாவது திருமணம் என்பது அனைவருக்கும் தெரியும். இவருக்கு, கொராேனா சமயத்தில் 2021ஆம் ஆண்டு டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர், தாமோதரன் ரோகித்துடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமண நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த ஓராண்டிற்குள்ளாகவே இவர்களுக்கு விவாகரத்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. ரோகித் மீது, 16 வயது பெண் ஒருவர் பாலியல் வழக்கு தாெடுத்ததால் இந்த விவாகரத்து நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதையடுத்துதான், இரண்டாவதாக அவருக்கு தருண் கார்த்திகேயனுடன் திருமணம் நடைப்பெற்றிருக்கிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles