Sunday, July 12, 2020
Home சினிமா Tamil cinema News கதறும் கர்ப்பிணி மனைவி... இறப்பதற்கு முன்பே தோன்றிய எச்சரிப்பு!... கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட நடிகர் சிரஞ்சீவி

கதறும் கர்ப்பிணி மனைவி… இறப்பதற்கு முன்பே தோன்றிய எச்சரிப்பு!… கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட நடிகர் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியான மேக்னா ராஜை தவிக்க விட்டு சென்றுவிட்டார் சிரஞ்சீவி சர்ஜா.

சிரஞ்சீவி சர்ஜா நடிகர் துருவ சர்ஜாவின் சகோதரரும், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகனும் ஆவார். இவரது தாத்தாவான சக்தி பிரசாத்தும் பிரபல நடிகராக வலம் வந்தவர்.

சிரஞ்சீவி சர்ஜா, கடந்த 2009ம் ஆண்டு தமிழில் வெளியான சண்டக்கோழி படத்தின் ரீமேக் படமான ‘வாயுபுத்ரா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். சுமார் 10 ஆண்டுகாலமாக திரையுலகில் வலம்வந்த அவர் சம்ஹாரா, ஆத்யா, காக்கி, சின்கா, அம்மா ஐ லவ் யூ, பிரேமா பராஹா, தண்டம் தசகுனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் திடீரென கடுமையான நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பெங்களூரு ஜெயாநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லாப்பட்டார் சிரஞ்சீவி சர்ஜா. ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Chiranjeevi-Sarja-death-final-farewell-Meghna-Raj-thinatamil
Chiranjeevi-Sarja-death-final-farewell-Meghna-Raj-thinatamil

அவருக்கு கடுமையான கார்டியாக் அரெஸ்ட் மற்றும் பிரைன் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பே சிரஞ்சீவி சர்ஜாவுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சிரஞ்சீவி சர்ஜா முதலுதவி சிகிச்சையுடன் நிறுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைக் கேட்ட ரசிகர்கள் ஒரு வேளை லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட போதே அதனை நடிகர் சிரஞ்சீவி சர்ஜா சீரியஸாக எடுத்திருந்தால் இன்று அவரது உயிர் போயிருக்காது என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.

சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் கனகாபுரத்தில் உள்ள அவரது தம்பியின் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சிரஞ்சீவி சர்ஜா தற்போது 3 படங்களில் நடித்து வந்தார். லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- Advertisment -

ஏனைய செய்திகள்

கல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...

அரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்..? ஆள் அடையாளமே தெரியவில்லையே..! இப்போ எப்படி...

அரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...

தினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள்...

உணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...

வெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம்! இரவு படுக்கும் முன் இதை...

சீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...

உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..

கோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline