பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.ஒவ்வொரு நாளும் மக்கள் நினைத்துப்பார்க்காத பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிஷோடில் கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
இதனை, ஏற்றுக்கொள்ள முடியாத லொஸ்லியா, மற்றும் சாண்டி கதறி அழ ஆரம்பித்தனர். கவினை முடிந்தவரையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே போக வேண்டாம் என தடுத்து நிறுத்தினர். ஆனால் கவின் வெளியேறியே தீரவேண்டும் என்ற முடிவுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
கவின் திடீரென வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவர் பணத்திற்காக வெளியேறினாரா இல்லை வேறு எதுவும் காரணமா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸில் இருந்து எவிக்டான அபிராமி, தன் பணிகளில் பிஸியாகிவிட்டார், இதற்கு முன்பாக மற்ற போட்டியாளர்களின் வீட்டிற்கு சென்று குடும்ப நண்பர்களை சந்தித்து வந்தார்.
மேலும் தற்போது ஒரு ட்வீட் போட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார்.
bஅதில் “கண்கள் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு” என எழுதியிருந்தார், இதை பார்த்த நெட்டிசன்கள் கவின் வருவது குறித்து மறைமுகமாக கூறுகிறார் என கொந்தளிக்க, அந்த பதிவையே நீக்கிவிட்டார்.அத்துடன்,இது வெறும் வரிகள் மட்டுமே தவிர யாரையும் குறிப்பிட்டு அல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளாராம்.