பிக் பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி- ஷிவின் கணேசன் இருவரும் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 5 சீசன் களை காட்டிலும் பரபரப்பாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6ல் பலரும் Safe Game விளையாடுவதாக கமெண்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
அசிம், தனலட்சுமி, விக்ரமன் மற்றும் ஷிவினை தவிர மற்றவர்கள் அனைவருமே பாதுகாப்பாக காய் நகர்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் அடிதடி சண்டை
இதேயே கமல்ஹாசனும் வாரஇறுதி நாட்களில் எடுத்துரைத்தார், இப்படியே விளையாடினால் Most Boring Seasonஆக இது இருக்கும் எனவும் கண்டித்தார்.
இந்த வார டாஸ்க்
இந்த வாரத்திற்காக ஏலியன்- பழங்குடியின மக்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது, டாஸ்க் தொடங்கிய நாளில் இருந்தே பலரும் ஆக்ரோஷமாக விளையாடி வருகின்றனர்.
வழக்கம்போல் அசிம் முழு திறமையையும் காட்ட, அமுதவாணன்- அசிம் இடையே சண்டை வெடித்தது.
பிக்பாஸ் வீட்டில் அடிதடி சண்டை
இதற்கு முன்னதாக தனலட்சுமி- ஷிவின் இடையே சண்டை மூண்டது, என்னுடைய அம்மாவை பத்தி இப்படி பேசுவியா? டாஸ்க்குக்கா ஏன் இப்படி? என கதறி அழுதார் ஷிவின்.
இவரை மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்தினர்.
வெளியான பரபரப்பு காட்சிகள்
இந்நிலையில் இருவரும் சண்டையிடும்படியான காட்சிகள் வைரலாகி வருகிறது, மிக ஆக்ரோஷமாகவே தனலட்சுமி ஷிவினுடன் சண்டையிடுகிறார்.
பிக்பாஸ் வீட்டில் அடிதடி சண்டை
எதற்காக இந்த சண்டை? மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என பல கேள்விகளுக்கு இன்றைய நாளில் பதில் கிடைத்துவிடும்.
இருவரையும் பார்த்தால் விளையாட்டுக்காக இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை, என்னமோ நடந்திருக்கிறது என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.



