விஜய் டிவியில் 80 நாட்களைக் கடந்து பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, சிவின், கதிர், மணிகண்டன் என ஒன்பது போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது அதில் அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து போட்டியாளர்களை மகிழ்வித்தனர்.
மீண்டும் ஜனனி
இந்த நிலையில் வைல்ட் கார்ட் சுற்றில் மீண்டும் ஜனனியை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும் இந்த சீசனின் வெற்றியாளர் பெரும்பாலும் விக்ரமன் அல்லது ஷிவின் இவர்கள் இருவரில் யாரோ ஒருவராகத் தான் இருக்க முடியும் என ரசிகர்கள் இப்போதே கணிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



