பிக்பாஸில் இருந்து விடைபெறும் கமல்… அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 7 யை தொகுத்து வழங்கிவரும் உலக நாயகன் கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.

கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் 2017ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன், திரைத்துறையில் நடிகராக மட்டுமன்றி திரைக்கதையாசிரியராகவும் இயக்குநராகவும் பாடகராகவும் பன்முகங்களை சிறப்பாக காட்டி வருகிறார்.

பிக்பாஸ் முதல் சீசனில் அவர் தொகுத்து வழங்கி வந்த போது இவருக்கு பெரிதாக எந்த விமர்சனங்களும் எழவில்லை “என்னப்பா புரியாம பேசுகிறார்..” என்ற பொதுவான கருத்து மட்டுமே ரசிர்கள் மத்தியில் இருந்தது.

பிக்பாஸில் இருந்து விடைபெறும் கமல்... அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா?
பிக்பாஸில் இருந்து விடைபெறும் கமல்… அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா?

கடந்த 6வது சீசனில் இவர் விக்ரமனுக்கு ஆதரவாக நின்றதாகவும் இதனால் அவர் பாரபட்சமான தொகுப்பாளராக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 7 போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே எந்த போட்டியாளரும் மக்களுக்கு பிடித்தவாறு இல்லை என்று கூறப்பட்டது.

இந்த சீசனின் பலமான போட்டியாளராக கருதப்பட்டவர், பிரதீப் ஆண்டனி. இவரை மக்களுக்கு பிடித்திருந்தாலும், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவரை பிடிக்கவில்லை. அவர், தகாத வார்த்தைகளால் பிறரை திட்டுவதும் பெண்களை குறி வைத்து ஆபாச வார்த்தைகளால் பேசுவது போன்ற விஷயங்களை செய்து வந்தார்.

இதனால், சில பிக்பாஸ் பாேட்டியாளர்கள் உரிமை குரல் தூக்கி, ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பினர். பிரதீப் வெளியேறிய பிறகு, அவர் தனது நிலையை எடுத்துரைக்க, கமல் வாய்ப்பு தரவில்லை என்ற கருத்து எழுந்தது.

பிரதீப்பை, தனது அரசியல் ஆதாயத்திற்காக உபயோகப்படுத்திக்கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும், தனக்கு பிடித்தவர்களை கமல்ஹாசன் எதுவும் கூறுவதில்லை எனவும், நடுநிலையாக இருப்பதில்லை எனறவும் கூறப்பட்டது.

பிக்பாஸில் இருந்து விடைபெறும் கமல்… அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா? | Bigg Boss 7 Tamil Kamal Haasan To Leave The Show

பிக்பாஸை விட்டு விடைபெறும் கமல்?
பிரதீப் விவகாரத்தை தொடர்ந்து, கமலுக்கும் பிக்பாஸ் குழுவினருக்கும் சரிபட்டு வரவில்லை என்று கூறப்படுகிறது. கமல், பிக்பாஸ் மேடையை தனது அரசியல் பிரசாரத்திற்காக உபயோகப்படுத்தி கொள்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

பிக்பாஸில் இருந்து விடைபெறும் கமல்… அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா? | Bigg Boss 7 Tamil Kamal Haasan To Leave The Show

இவர் போட்டிருந்த ஆடையில் இருந்து, அவர் பேசிய விஷயங்கள் வரை அனைத்தும் மீம் மெட்டீரியலாக மாறியது. இந்த நிலையில், அவர் இனிவரும் சீசன்களில் தொடர மாட்டார் என கூறப்படுகிறது.

இவருக்கு பதிலாக யார்?
இவருக்கு பதிலாக வேறு ஒரு பெரிய நடிகர் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா? ரசிகர்களால் ‘சுப்ரீம் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் சரத்குமார், கமல்ஹாசனுக்கு பதிலாக தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸில் இருந்து விடைபெறும் கமல்… அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா? | Bigg Boss 7 Tamil Kamal Haasan To Leave The Show

இவரது பெயரோடு சேர்ந்து, இன்னும் 2-3 நடிகர்களின் பெயரையும் பிக்பாஸ் குழுவினர் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles