Bigg Boss 6 Tamil “இந்த ஆட்டமே தப்பு..” கலகலவென G.P முத்து மைக் Task-ல கொந்தளிச்சுட்டாரேப்பா..!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

லக்சூரி பட்ஜெட் டாஸ்க், பிக்பாஸ் வீட்டில் தொடங்கிவிட அமைதியாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் வீட்டில் ஆர்ப்பாட்டம் தொடங்கிவிட்டது. இதற்கு முன்பாக ஒருவரைப் பற்றி ஒருவர் பேசக்கூடிய அமர்வில் அசல் கோலார் பேசியதை கேட்டு ஆயிஷா அழுதே விட்டார்.

Bigg Boss 6 Tamil "இந்த ஆட்டமே தப்பு.." கலகலவென ஜிபி முத்து மைக் Task-ல கொந்தளிச்சுட்டாரேப்பா..!
Bigg Boss 6 Tamil “இந்த ஆட்டமே தப்பு..” கலகலவென ஜிபி முத்து மைக் Task-ல கொந்தளிச்சுட்டாரேப்பா..!

அதன் பிறகு இருவரும் சமாதானமாகி கொண்டனர். ஆனாலும் டாஸ்க் வந்துவிட்டது. இனி இன்னும் சூறாவளியாக பிக் பாஸ் இருக்கும் என்பதற்கு உதாரணமாய் அடுத்தடுத்த சம்பவங்கள் நடக்கின்றன.

அதன்படி பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு மைக் முன்பாக நின்று கத்த வேண்டும். என்ன சத்தம் இந்த நேரம் என்கிற இந்த போட்டியில், அதிக டெசிபல் வரும்படி யார் அதிகம் சத்தம் எழுப்பி கட்டுகிறார்களோ அவர்களுக்கு ஸ்டார் வழங்கப்படும். இதனை தொடர்ந்து அசீம் கத்துகிறார் ஆனால் அவருடைய குரல் சரியாக பதிவாகவில்லை என்கிற காரணத்துக்காக மீண்டும் அவரை பிக்பாஸ் கத்த சொல்லுகிறார்.

இதேபோல் மற்ற அணி கத்துபொழுது அவர்கள் இரண்டாவது முறை கத்துவதற்கு வாய்ப்பு கேட்கின்றனர்.

இதை பார்த்த அசீம் அணியை சேர்ந்த ஜிபி முத்து கொந்தளித்து விட்டார். ஜிபி முத்துவின் அணியில் இருந்தவர்களும், “இது பிக் பாஸாக எடுத்த முடிவுதான்.. நீங்கள் அதை வாய்ப்பாக பயன்படுத்தி இன்னொரு முறை கத்துவதற்கு கேட்கிறீர்கள். டெக்னிக்கல் பிரச்சனை வேறு..

நீங்கள் கேட்பது வேறு” என்று சண்டையிடுகின்றனர். அப்போது கொந்தளித்த ஜி பி முத்து, ‘இந்த ஆட்டமே தப்பு.. இப்படி இருந்தால் வேண்டவே வேண்டாம்’ என்று வாதிடுகிறார். எப்போதும் கலகலப்பாக பேசும் ஜிபி முத்து இப்படி கொந்தளித்து வாதம் பண்ணுவதை சகப் போட்டியாளர்களும் இப்போது தான் கவனிக்க தொடங்குகின்றனர். இப்படி அதிரடி டாஸ்க் பிக்பாஸில் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருக்கின்றன.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles