பணத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனால், கடனாளியாகப் போகும் ராசிகள்! அக்டோபர் மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், வாழ்க்கையே சுகமாக இருக்கும். பணம் சொந்தமாக இல்லாவிட்டாலும், சுகபோகங்களுக்கு குறைவே இருக்காது. சொகுசு வாழ்க்கை வாய்க்கும். ஆடம்பரமான வாழ்க்கையும், விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கும் யோகத்தையும் கொடுப்பது சுக்கிரன் கிரகம் தான். ஆனால், சுக்கிரன் எந்த கிரகத்துடன் சேர்கிறார் என்பதைப் பொறுத்து பலன்கள் மாறும்.

பணத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனால், கடனாளியாகப் போகும் ராசிகள்! அக்டோபர் மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
பணத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனால், கடனாளியாகப் போகும் ராசிகள்! அக்டோபர் மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரன் அக்டோபர் மாத பெயர்ச்சி

அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் சுக்கிரனின் பெயர்ச்சி பலருக்கும் வெவ்வேறுவிதமான பலன்களைக் கொடுக்கும். பண்டிகைக் காலத்தில் வரும் இந்த பெயர்ச்சி அனைவருக்கும் செலவுகளை இழுத்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. நடுத்தர வர்கத்தினர், ஏழைகள், உழைக்கும் வர்கத்தினர் மட்டுமல்ல, செல்வந்தர்களும் இந்த மாதத்தில் வழக்கத்தை விட அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆடம்பரத்திற்கு காரணகர்த்தாவான சுக்கிரனின் அக்டோபர் மாதப் பெயர்ச்சியால் பணத்தை கடன் வாங்கி செலவு செய்யப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்

எதிர்பாராத புதிய வாய்ப்புகளால் மனதில் குதூகலம் ஏற்படும். சுபமான காரியங்கள் நடந்தேறும் காலம் இது. பயணங்களின் மூலம் நட்பு வட்டாரம் விரிவடையும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.

ரிஷபம்

எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் காலம் இது. திடீர் வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் ஏற்றம் உண்டாகும். நெருக்கமானர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதால் கெட்டுப்போக மாட்டோம் என்பதை புரிந்துக் கொள்ளும் காலம் இது.

மிதுனம்

வித்தியாசமான அனுபவங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் குழப்பமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் குறையும். வியாபார பணிகளில் அலைச்சல் உண்டாகும். கடன் வாங்கி செலவு செய்ய வேண்டி வரலாம், எனவே விவேகத்துடன் செயல்படவும்.

கடகம்

கடன் வாங்கியவர்களுக்கு கவலைகள் அதிகரிக்கும், பணம் பற்றாக்குறையால் மாறுபட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களின் வேலையையும் நீங்களே செய்ய வேண்டி இருக்கலாம். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

சிம்மம்

சகோதரர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பும் இணக்கமும் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படும் காலம் இது. போட்டி மனப்பான்மை எல்லா இடத்திலும் சரியாக இருக்காது. உறவினர்களிடையே மதிப்பு அதிகரிக்கும்.

கன்னி

மனதில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டானாலும், உள்ளுக்குள் பிரச்சனை கனன்றுக் கொண்டே இருக்கும். பொருளாதார சிக்கல்கள் மனதில் ஆயாசத்தை ஏற்படுத்தும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

துலாம்

சில பணிகளை நேரடியாக நாமே செய்து முடிப்பது நல்லது. விட்டுக்கொடுத்துச் செல்வதால் கெட்டுப்போனவர்கள் இல்லை. எதிலும் கவனத்துடன் செயல்படவும். கடன் வாங்கி செலவு செய்ய வேண்டியிருந்தால், முடிந்த அளவு அதனை தவிர்க்கவும். தெரியாத விஷயங்களில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

சுக்கிரன் விருச்சிக ராசியிலேயே மாற்றமடைவதால் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக தீர்க்கவும்.

தனுசு

உயர் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றினால் உயர்பதவி கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழும் காலம் இது. பேச்சில் அனுபவம் வெளிப்படும்.

மகரம்

புதிதாக அறிமுகம் ஆனவர்களால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். எதிரியாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். வாகன செலவுகளை குறைக்கவும், திட்டமிட்டு செயல்பட்டால் நிம்மதியாக இருக்கலாம்.

கும்பம்

நல்லவர்களின் அறிமுகத்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் பிறக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பதற்றமின்றி செயல்படுவது நல்லது. தந்தைவழி உறவுகளால் சிக்கல் அதிகரிக்கும்.

மீனம்

தேவையில்லாத விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபமும் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாக நடந்துக் கொள்ளவேண்டாம். விவேகத்துடன் செயல்படவும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles