ராஜா ராணி, தெறி, மெர்சல் என அதிரடியான படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீயின் அழகிய காதல் கதை மிகவும் சுவாரஷ்யமான ஒரு சம்பவம் என்றே கூறலாம்.
அட்லீ கடந்த 2014ஆம் ஆண்டு ப்ரியா என்ற சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அட்லீ மற்றும் சிவா கார்த்திகேயன் இருவரும் நெருக்கமான நண்பர்கள். சிவா ஜோடி வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார். அதில் ப்ரியாவும் இருந்துள்ளார்.
இந்த நேரத்தில் சிவாவை பார்க்க அட்லீ வந்துள்ளார். அங்கு ப்ரியாவை பார்த்ததும் பிடித்துவிட்டது.
ஆனால், பின்னர் வேறு ஒரு நிகழ்ச்சியில் அட்லீ குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். அதே நிகழ்ச்சிக்கு ப்ரியாவின் குடும்பமும் வருகை தந்துள்ளனர்.
இரு வீட்டாரும் பேசி குடும்ப நண்பர்களாக மாறிவிட்டனர். கிட்டத்தட்ட 8 வருடங்கள் இந்த நட்பு நீடித்துள்ளது. பின்னர் நட்பு கதலாக மாறி திருமணத்தில் முடிந்துவிட்டது.



