அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி – தற்போது நலமுடன் டிஸ்சார்ஜ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், அஜித் குமார், சமீபத்தில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்ற செய்தி அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஏன் அனுமதிக்கப்பட்டார்?
சில நாட்களுக்கு முன் பத்மபூஷன் விருது பெற்ற அஜித், விருது பெற்ற பிறகு சென்னை திரும்பினார்.
அதைத்தொடர்ந்து உடல்நல பரிசோதனைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அதிகாரப்பூர்வமாக இது ஒரு ரெகுலர் ஹெல்த் செக்-அப் என்பது உறுதியாகியுள்ளது.
தற்போது நிலை:
அஜித் குமார் முழுமையாக நலமுடன் சிகிச்சை முடித்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
ரசிகர்கள் இதை தெரிந்ததும்…
அஜித் நலமுடன் இருப்பது உறுதியான தகவலாக வந்ததும், ரசிகர்கள் அனைவரும் மற்றும் இணையவாசிகள் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் “#GetWellSoonAjith” என்ற ஹாஷ்டேக்கை “Thank God Ajith is Fine” என மாற்றி டிரெண்ட் செய்துள்ளனர்.உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித் குமார், தற்போது நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.



